இன்று இரவு இதை மட்டும் உங்களுடைய தலையில் போட்டால், மறுநாள் காலையே உங்களுடைய முடி உதிர்வு நிற்கும். எண்ணி 30 நாட்களில் முடி கட்டுக்கடங்காமல் வளர தொடங்கிவிடும்.

hair2

தலைமுடி உதிர்வு பிரச்சினைக்கு பல வகையான வழிகள், பல முறைகளில் சொல்லப்பட்டுள்ளது. மிக மிக சுலபமான முறையில் எளிமையான ஒரு டிப்ஸை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெறும் 3 பொருட்களை வைத்து செலவில்லாமல் இந்த சீரம் உங்களுடைய வீட்டில், உங்கள் கையாலேயே தயாரித்து, அதை தலையில் அப்ளை செய்து கொண்டாலே போதும். முடி உதிர்வு படிப்படியாக நிற்கும். முப்பதே நாட்களில் முடி வளர தொடங்குவதை கண்கூடாக காணலாம். அப்படி ஒரு குறிப்பை தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

alovera-gel4

இந்த குறிப்புக்கு நமக்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை முதலில் பார்த்துவிடுவோம். அலோ வேரா ஜெல், விளக்கெண்ணை, வெந்தயம் ஊற வைத்த தண்ணீர். நிறைய பேருக்கு வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் கொண்டால் அதை ஷாம்பு போட்டு தேய்த்து அலசி சுத்தம் செய்ய சிரமமாக உள்ளது. அந்த சிரமம் கூட இந்த குறிப்பில் உங்களுக்கு இருக்காது. (வெந்தயத்தை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டு அந்த தண்ணீரை மட்டும் இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.)

ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும் அலோ வேரா ஜெல்லை வாங்கிக்கொள்ளலாம். முடிந்தால் இயற்கையாக இருக்கும் கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. ஒரு சிறிய அகலமாக இருக்கும் பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் அலோ வேரா ஜெல், 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் இந்த இரண்டு பொருட்களையும் முதலில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

castro-oil

இந்த இரண்டு பொருட்களையும் கலக்கும்போது இது கொஞ்சம் திக்கான பதத்தில் தான் இருக்கும். இதை ஒரு சீரம் பதத்திற்கு கொண்டு வாருங்கள். அதற்கு வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக இந்த கலவையோடு சேர்த்து நன்றாக கலந்து கொடுக்க வேண்டும். இந்த சீரம் ரொம்பவும் தண்ணீராகவும் மாறி விடக்கூடாது. அதற்காக மிகவும் கட்டியாகவும் இருக்க கூடாது. கொழகொழவென்று ஒரு ஷாம்பு பதத்திற்கு வரும்வரை, தேவையான அளவு வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.(50ml வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் இருந்தால் சரியாக இருக்கும்.)

இப்போது நமக்குத் தேவையான சீரம் தயார். ஆனால் இந்த சீரமை உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது தான் பிரஷ்ஷாக தயார் செய்து கொள்ளவேண்டும். தயார் செய்த பழைய சிரத்தை ஃப்ரிட்ஜில் வைத்து எல்லாம் தலையில் போடக்கூடாது. தயார் செய்த இந்த சீரத்தை உங்களுடைய தலைமுடியில் வேர்க்கால்களில் படும் வரை போட்டு நன்றாக மசாஜ் செய்து, அப்படியே ஒரு நாள் இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும்.

cobing-hair-1

மறுநாள் காலை ஒரு நல்ல ஹெர்பல் ஷாம்பு போட்டு தலையை சுத்தம் செய்து பாருங்கள்‌. வழக்கத்தைவிட உங்களுடைய முடி உதிர்வு நிச்சயமாக குறைந்திருக்கும். இதேபோல் வாரத்தில் 2 நாட்கள் இப்படி இந்த சீரமை உங்களுடைய தலைமுடிக்கு பயன்படுத்தலாம். எண்ணி ஒரே மாதத்தில், முப்பதே நாட்களில் முடி உதிர்வு முழுமையாகக் குறையும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். முயற்சி செய்து பாருங்கள்.