இந்த 1 பொருளை சேர்த்து பெசஞ்சு ஒரே ஒரு வாட்டி, சப்பாத்தி சுட்டு பாருங்க! மறுநாள் வரைகூட சப்பாத்தி சாஃப்டா இருக்கும்! உங்களுக்காக புதுவிதமான சப்பாத்தி ரெசிபி!

aloo-chapathi
- Advertisement -

நம் வீட்டில் இருப்பவர்களுக்கு  சப்பாத்தியை மட்டும் திருப்தியாக செய்து கொடுக்கவே முடியாது. எவ்வளவு தான் சாஃப்டாக சப்பாத்தி மாவு பிசைந்து சப்பாத்தியை சுட்டாலும், மிருதுவாக இல்லை என்ற குறையை வீட்டில் இருப்பவர்கள் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். வித்தியாசமாக நம் வீட்டில் இருக்கக் கூடிய இந்த ஒரு பொருளை மாவோடு சேர்த்து பிசைந்து, ஒரே ஒரு வாட்டி சப்பாத்தி சுட்டு, ட்ரைபண்ணி பாருங்க. இதோட சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இதோடு சேர்த்து, சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக சுலபமான வெங்காய தொக்கு எப்படி செய்வது என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

potato

Step 1:
1 கப் அளவு கோதுமை மாவை எடுத்துக் கொண்டால், ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். எத்தனை கப் மாவு எடுத்து கொள்கிறீர்களோ, அத்தனை உருளைக்கிழங்கை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். வேகவைத்த உருளைக்கிழங்கை, தோல் உரித்து விட்டு, நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். கேரட் பீட்ரூட் துருவல் பலகையில், உருளைக்கிழங்கை துருவி உதிரி உதிரியாக வைத்து, அதன் பின்பு அதை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். (உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது கொஞ்சம் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

Step 2:
பிசைந்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கோடு, 1 கப் கோதுமை மாவை சேர்த்து மாவுக்கு தேவையான உப்பையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் முதலில் நன்றாக பிசைய வேண்டும். மாவும் உருளைக்கிழங்கும் நன்றாக கலந்த பின்பு, லேசாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பிசைவது போலவே இந்த கலவையை தயார் செய்து கொள்ளுங்கள். தண்ணீரை மட்டும் மொத்தமாக ஊற்றி விடக் கூடாது. உருளைக்கிழங்கில் இருந்து தண்ணீர் விடும். தண்ணீர் தெளித்து மாவை பிசைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

chapathi-maavu1

Step 3:
பிசைந்த மாவை 10 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து விடுங்கள். அடுத்தபடியாக மாவை உருண்டைகளாக பிடித்து, சப்பாத்தி செய்வது போலவே தேய்க்க வேண்டும். ரொம்பவும் மெல்லிசாக தேய்க்க வேண்டாம்‌. ரொம்பவும் தடிமனாகவும் தேய்க்க வேண்டாம். நீங்கள் மாவை தேய்க்கும்போது உருளைக்கிழங்கு சப்பாத்தியில் நன்றாக தெரியும்.

- Advertisement -

Step 4:
தோசைக்கல்லை நன்றாக சூடு படுத்திய பின்பு, சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான். இந்த சப்பாத்தி  ஆரிய பின்பும் கூட, மிகவும் மிருதுவாக இருக்கும். லஞ்ச் பாக்ஸில் பேக் செய்து கொடுத்தால், சப்பாத்தியின் சுவை, தன்மை மாறாது.

chapathi1

இந்த சப்பாத்திக்கு தோதாக ஒரு வெங்காய தொக்கு:
2 பெரிய வெங்காயங்களை, இரண்டாக வெட்டி தோலை உரித்து கொள்ள வேண்டும். இந்த வெங்காயத்தை முடிந்தால், உங்களது கையாலேயே மிக மிக பொடியாக நறுக்கிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் மிக்ஸியில் போட்டு ரிவர்ஸ் பட்டனில் வைத்து ஒன்றும் இரண்டுமாக, நறுக்கிக் கொள்ளலாம். இல்லை என்றால் கேரட் பீட்ரூட் துருவல் பலகையில்துருவிக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். ஆனால் வெட்டிய வெங்காயத்திலிருந்து தண்ணீர் விடும் அளவிற்கு பொடியாக இருக்க வேண்டும்.

- Advertisement -

vengaya-thokku

அடுப்பில் கடாயை வைத்து 4 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் 1/2 ஸ்பூன் கடுகு சேர்த்து, ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு, ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டு, அதன் பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு, நன்றாக வதக்கவேண்டும். வெங்காயத்தின் பச்சை வாசனை சுத்தமாக போன பின்பு, ரொம்பவும் பொடியாக நறுக்கிய 1 தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.

Chapathi maavu

தக்காளியும் வெங்காயமும் நன்றாக வதங்க வேண்டும் என்றால், 1/2 ஸ்பூன் அளவு மஞ்சள் தூளையும், 1 ஸ்பூன் அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயமும் தக்காளியும் முக்கால்வாசி வதங்கியவுடன் தொக்குக்கு மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன், சேர்த்து இந்த மசாலாப் பொருட்களின் பச்சை வாடை நீங்கி தொக்கில் ஊற்றி இருக்கும் எண்ணெய் நன்றாக கக்கி வெளியில் வரும்வரை வதக்கி எடுக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி, சப்பாத்தியோடு பரிமாறினால் சூப்பர் டிபன் தயார்.

இதையும் படிக்கலாமே
துருப்பிடித்த தோசைக்கல்லை மொறுமொறுன்னு தோசை சுட்ற அளவுக்கு சூப்பரா எப்படி மாற்றுவது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -