ஒரு உருளைக்கிழங்கு இருந்தா நல்ல மொறு மொறுன்னு கிறிஸ்பியான இந்த தோசை சுட்டு சாப்பிடுங்க. இப்படி ஒரு சுவையான தோசையை பைவ் ஸ்டார் ஹோட்டல்ல கூட சாப்பிட முடியாது டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

potato dosa
- Advertisement -

தோசை என்றாலே பலருக்கும் கொள்ளை பிரியம் தான் அதுவும் நன்றாக சிவந்த மொரு மொருவென்ற தோசையைதட்டில் வைத்து அதற்கு சாம்பார் சட்னி கொண்டு வந்து வைத்தால் போதும். அப்படியே அந்த தோசைக்கு அடிமையாகி விடுவார்கள். அந்த அளவிற்கு தோசை பிரியர்கள் அதிகம். அப்படி ஆசையாக சாப்பிடும் இந்த தோசை ரெசிபியை எப்படி இன்னும் சுவையாக அதே நேரத்தில் வித்தியாசமாக செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை 

இந்த தோசை செய்ய ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி நன்றாக சுத்தம் செய்த பிறகு காய் சீவும் சீவலில் சின்ன சின்ன துளைகள் இருக்கும் பக்கத்தில் இந்த உருளைக்கிழங்கை நன்றாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு பவுலை எடுத்து அதில் துருவிய உருளைக்கிழங்கை சேர்த்த பிறகு ஒரு கப் கோதுமை மாவு அரைக் கப் ரவை சேர்த்து கொள்ளுங்கள். இதற்கு வறுத்த ரவை வறுக்காத ரவை எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இத்துடன் கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப்கோதுமை மாவிற்கு மூன்று கப் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு கப் மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு மீண்டும் ஒரு கப் தண்ணீர் ஊற்றுங்கள் இந்த மாவு கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்த பிறகு மாவின் பதத்தை பார்த்துக் கொண்டு மீதம் இருக்கும் தண்ணீரை அரைக்கப் அல்லது ஒரு கப் ஊற்றி கொள்ளுங்கள். ஏனெனில் சில நேரம் ரவையை பொறுத்து தண்ணீர் கொஞ்சம் கூட குறைய தேவைப்படும். இந்த மாவு ரவை தோசைக்கு மாவு பதத்திற்கு தண்ணீராக இருக்க வேண்டும்.

இப்படி கலந்த இந்த மாவை 15 நிமிடம் வரை தட்டு போட்டு அப்படியே மூடி வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த மாவில் ஒரு சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் சில்லி ப்ளாக், சில்லி பிளக்ஸ் இல்லாத பட்சத்தில் பச்சை மிளகாயை சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு கொத்து கொத்தமல்லி இரண்டையும் பொடியாக இருந்து சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் ஒரு ஸ்பூன் சீரகம் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது தோசைக்கான மாவு தயாராகி விட்டது. அடுப்பில் கல் வைத்து சூடானவுடன் தோசை மாவை எடுத்து ரவை தோசை ஊற்றுவது போல எடுத்து தோசை கல்லை சுற்றிலும் மாவை ஊற்றுங்கள்.தோசை நன்றாக சிவந்த பிறகு திருப்பி போடாமல் அப்படியே சுருட்டி எடுத்து விடுங்கள். நல்ல மொறு மொறுவென்று கிரிஸ்பியான அதே நேரத்தில் நல்ல சுவையான தோசை தயார்.

இதையும் படிக்கலாமே: இந்தப் பழத்தை வைத்து இப்படி ஒரு முறை அல்வா செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். இனிமேல் இந்த பழத்தை பார்க்கும்போதெல்லாம் அல்வா வேண்டும் என்று கேட்பார்கள்.

இந்த முறையில் தோசை செய்து பாருங்கள் நீங்கள் சாதாரணமாக செய்து சாப்பிடும் தோசையை விட சுவை அட்டகாசமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் இதில் ரவை கோதுமை உருளைக்கிழங்கு என உடலுக்கு ஆரோக்கியமான பொருட்களை மட்டுமே சேர்த்து செய்வதால் இதை அனைவருமே கூட சாப்பிடலாம். இந்த தோசை ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -