நினைத்ததை நடக்கச்செய்யும் ஆல்பா தியானம் பற்றி தெரியுமா ?

dhiyanam
- Advertisement -

ஒரு செயலை செய்வதற்கு முன்பு அதைப் பற்றிய அடிப்படை புரிதல் வேண்டும். உலகின் அளப்பரிய சக்திகளில் ஒன்று தான் நம் ஆழ்மனது. அதனை உணர்ந்து அதை நமக்கு சாதகமாக மாற்றி கொள்வதைப் பற்றி நாம் இந்த பதிவில் காண உள்ளோம்.

Thiyanam

செல்வம், உயர் புகழ் இப்படி எதை வேண்டுமென்றாலும் ஆழ்மனதின் சக்தி கொண்டு அடைய முடியும். இந்த ஆல்பா தியானம் தொடர்ந்து செய்வதால் உங்கள் எண்ணம் உணர்வு அனைத்திலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். சாதாரண மனித எண்ணங்களில் இருந்து ஒரு படி முன்னேறி பல்வேறு எண்ணங்களைக் கொண்ட மனிதராக உங்களை உயர்த்தும். நம் மூளையில் உள்ள எண்ணங்களில் மூன்று நிலைகள் உள்ளது அவை ஆல்ஃபா, பீட்டா, டெல்டா ஆகும். இதில் இரண்டாம் நிலை தூக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் வலது பக்க மூளையின் ஆழமான சக்தியோடு தொடர்புடையது. ஆல்பா தியானம் மூலம் நமது வலதுபக்க மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்து நினைத்ததை அடையலாம்.

- Advertisement -

நாம் அதிகமாக பீட்டா நிலையில் தான் இயங்குகிறோம். அதாவது சாதாரண கான்ஷியஸ் மைண்ட் தொடர்ந்து இயங்குவதால் என்ன நிகழும் என்று நாம் ஒரு உதாரணத்துடன் இப்பொழுது காண்போம். யானைக்கு சிறுவயதில் காலில் சங்கிலி கொண்டு கட்டுவார்கள். சிறு வயதில் யானையால் அந்த சங்கிலியை உடைக்க முடியாது. நாட்கள் செல்ல செல்ல யானை வளர்ந்துவிடும். ஆனாலும் அதே சங்கிலியால்தான் யானையை கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள். யானையால் இப்பொது அந்த சங்கிலியை தகர்த்து போக முடியும். ஆனால் யானை அப்படி செய்யவில்லை. ஏன் என்றால் அதன் மனதில் சிறு வயதிலிருந்தே அதனை உடைக்க முடியாது என்று பதிவாகிவிட்டது. இதுபோல தான் நமது மனதிலும் பல்வேறு தேவையற்ற எதிர்மறையான பதிவுகள் இருக்கிறது. நம்மால் இவ்வளவுதான் செய்யமுடியும் என்று நாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் நம்மை அடங்கி விடுகிறோம். அதுதான் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்ய ஒரு காரணமாக அமைகிறது.

Thiyanam

சரி எப்படி அதனை தவிர்ப்பது. நமது வலது பக்க மூளையை ஊக்குவித்து அதன் செயல்திறனை அதிகரிக்க வேண்டும். இந்த நிலையை தொடர்ந்து பழகுவதன் மூலம் நாம் நினைத்ததை செய்ய இயலும். ஆல்பா தியானத்தை நீங்கள் செய்தால் மனதிற்கு நிம்மதியும் உடலிற்கு ஆரோக்கியமும் கிடைக்கும். நீங்கள் ஆல்பா தியானத்தை செய்ய சரியான நேரம் அதிகாலை வேளை. ஒருவேளை அதிகாலையில் செய்ய முடியாவிடில் இரவு நேரத்தில் செய்யலாம். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உங்களுடைய ஆற்றலை அதிகரிக்க முடியும், உங்களுடைய உள்ளுணர்வின் செயல்திறனை அதிகரிக்க முடியும், உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க ஆல்பா தியானம் உதவும். நீங்கள் நினைத்த லட்சியத்தை இதன் மூலம் நிச்சயமாக அடையலாம்.

- Advertisement -

Thiyanam

உங்கள் மனதிலுள்ள எண்ணங்களை மற்றவர் இடத்தில் பேசாமலேயே தெரிவிக்க முடியும். உங்கள் பொன்னான நேரத்தை சரியாக பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தலாம். எண்ணங்கள் மற்றும் செயல்களை கட்டுக்குள் வைக்க இது உதவும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆல்பா தியானம் உங்களுக்கு உதவும். அதுமட்டுமில்லாமல் மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வை நினைத்த நேரத்தில் மாற்றலாம். இந்த ஆல்பா தியானம் மூலம் நிம்மதியான உறக்கத்தையும் பெறலாம். இந்த தியானத்தின் சக்தி கொண்டு உங்களுடைய நோயை குணப்படுத்த முடியும். அதோடு மற்றவர்களுடைய நோயையும் உங்களால் குணப்படுத்த முடியும். ஆல்பா தியானத்தை படுத்துக்கொண்டு செய்யக்கூடாது. தியானம் என்றாலே அமர்ந்த நிலையில் செய்ய வேண்டும். அதாவது உட்கார்ந்து கொண்டு தான் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் உடல் முழுவதும் தளர்ந்த நிலையில் தான் இருக்க வேண்டும். இறுக்கமான நிலையில் இருக்கக்கூடாது.

ஆல்பா தியானம் செய்வது எப்படி: ஆல்பா தியானத்தை அமைதியான மற்றும் காற்று உள்ள இடத்தில் தனிமையில் தான் செய்யவேண்டும்.

- Advertisement -