நாளை மார்கழி அமாவாசை படையல் சாதத்துடன், இந்த ஒரு பொருளை சேர்த்து வைத்தால், உங்களை பாடாய் படுத்தும் துன்பங்கள் கூட பயந்து ஓடி விடும். மறக்காமல் செய்து விடுங்கள்.

- Advertisement -

அமாவாசை என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது நம் வீட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது தான். இந்த தர்ப்பணம் தவறாமல் கொடுக்கும் குடும்பத்தில் எப்பேர்பட்ட பிரச்சனையும் விலகி நல்ல முறையில் வாழ வழி பிறக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் இல்லாமல் நாம் எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் வெற்றி காண முடியாது. அப்படி முன்னோர்களுக்காக வழிபடும் இந்த நாளில் அவர்களுக்கு வைத்து வழிபடும் உணவில் எந்த பொருளை மட்டும் சேர்த்து வைத்தால் பலன் கிடைக்கும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வருடத்தின் கடைசி மாதமான மார்கழி மாதத்தில் வரும் இந்த அமாவாசை மிக மிக விசேஷமானது. இந்த அமாவாசை வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்திருப்பதால் ஒரே நேரத்தில் மகாலட்சுமி தாயாரின் அருளும் கிடைக்கும். அதே நேரத்தில் முன்னோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் இரண்டையும் ஒரே நாளில் பெற உகந்த நாள் இன்று. இந்த அமாவாசையில் ஏன் கட்டாயம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பொதுவாகவே மார்கழி மாதத்தில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மாதமே பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் இந்த மாதத்தில் வரும் இந்த அமாவாசையில் நாம் இப்படி தர்ப்பணம் கொடுப்பதால் நம் வீட்டில் எதிர்பாராமல் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையாமல் இருந்தால் கூட, இந்த நாளில் அவர்களை நாம் வணங்கும் போது அவர்களுக்கு சொர்க்கவாசல் திறந்து அவர்களுக்கு அவ்வுலகத்தில் நிலையான இடம் கிடைக்க இந்த தர்ப்பணம் உதவி புரியும். ஆகையால் இந்த நாளில் கட்டாயம் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

கஷ்டம் தீர அமாவாசை படையல் வழிபாடு:
இந்த அமாவாசை நாளில் இறந்தவர்களுக்கு அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஒரு வேளை கோவிலில் சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டில் படையல் வைத்து வணங்கும் வேலையில் பெருமாளையும் மனதில் நினைத்து, இறந்தவர்களின் பெயரை மனதிற்குள் சொல்லி அவர்களுக்கு சொர்க்க வாசலில் திறந்து நிலையான இடம் கிடைத்து முக்தி அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு காகத்திற்கு சாதம் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் சாதத்தில் நீங்கள் படையல் இருக்கும் அனைத்தையும் வைத்த பிறகு கொஞ்சம் எள்ளை அதில் சேர்த்து வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த எள் சாதம் வைப்பது கோவிலில் தர்ப்பணம் கொடுத்தாலும் வைக்க வேண்டும். வீட்டில் படையல் வைத்து வணங்கினாலும் வைக்க வேண்டும். இதை செய்வதின் மூலம் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதோடு, நம்மை பாடாய் படுத்தும் பிரச்சினைகளில் இருந்தும் தீர்வு கிடைக்கும்.

நாம் என்ன தான் வழிபாடு செய்தாலும், இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய விட்டால், நம்முடைய பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் தீர்வு கிடைக்காது.இந்த நாளில் வழிபாடு செய்து உணவு படைத்து காக்கைக்கு சாதத்துடன் எள்ளுடன் கலந்து வைக்கும் போது அவர்களுக்கும் முக்தி கிடைத்து இதை உண்ண வந்து ஆசிர்வதிப்பார்கள். அதே சமயம் எள்ளானது சனீஸ்வருக்கு முக்கியமானது இதை காகங்கள் எடுக்கும் போது நம்முடைய பிரச்சனைகளை சீக்கிரமாக தீர்ந்து விடும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பெண்கள் இந்த திலகத்தை மட்டும் வைக்கவே கூடாது, இந்த திலகத்தை வைத்து பூஜை செய்யும் பெண்கள் வீட்டில் செல்வம் தங்காமல் போவதுடன், தெய்வ சக்தியும் பலம் இழந்து விடும்.

இப்படி செய்வதோடு இல்லாமல் இந்த நாளில் நிச்சயமாக இல்லாத யாரேனும் ஒருவருக்காவது வயிறார உணவு தர வேண்டும். உங்களால் முடிந்தால் அதிகமாக கூட செய்யலாம், முடியாதவர்கள் ஒருவருக்காவது வாங்கிக் கொடுங்கள். இத்தனை பலன்கள் தரக்கூடிய இந்த அமாவாசை நாளை தவிர விடாமல் இந்த வழிபாட்டை செய்து முன்னோர்கள் ஆசியும் தெய்வத்தின் அனுகிரகத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

- Advertisement -