இன்று மாலை 6 மணிக்கு முன்பு, இந்த முடிச்சை, உங்கள் வீட்டில் கட்டி வைத்தால், கழுத்தை நெறிக்கும் கடன் சுமையும் தண்ணீரில் கரைத்த உப்பு போல காணாமல் போகும்.

kadan amavasai
- Advertisement -

இன்று சித்திரை அமாவாசை! சிறப்பு வாய்ந்த அமாவாசையும் கூட, பொதுவாகவே அமாவாசை தினம் என்பது முன்னோர்களுடைய வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இன்று சித்திரை அமாவாசை எனும் பட்சத்தில் உங்கள் வீட்டில் மறைந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்யவேண்டும் என்பதையும் நினைவில் கொண்டு இந்த பதிவினை தொடர்வோம். அமாவாசை தினம் எந்த அளவிற்கு முன்னோர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவிற்கு குல தெய்வ வழிபாட்டிற்கும் உகந்த நாள் என்று சொல்லுவார்கள்.

amavasai

இன்றையதினம் நம்முடைய கஷ்டங்கள் தீர குல தெய்வத்திடம் மனமுருகி வேண்டுதல் வைத்தால், அது உடனே நடக்கும். அந்த வரிசையில் உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம், கடன் கஷ்டம் தீரவும், அடமானம் வைத்த நகைகளை மீட்டு எடுக்கவும் அமாவாசை தினத்தன்று செய்யக்கூடிய ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பணம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றாலும், அந்தப் பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பதில் இந்த கல் உப்புக்கு முதலிடம் உண்டு. ஏனென்றால் அந்த கல் உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் பரிகாரமும் இந்த கல் உப்பை வைத்து தான். ஒரு சிறிய மஞ்சள் துணியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பைப் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த கல் உப்பின் மேல் கடன் தீர வேண்டும் என்று 1 ரூபாய் நாணயத்தை வையுங்கள்.

manjal-mudichu

உங்களுடைய நகைகள் அடமானத்தில் இருந்தால் ஒரு சிறிய குண்டுமணி தங்கத்தை கல் உப்போடு முடிந்து வைக்கவேண்டும். மஞ்சள் துணியில் கல்லுப்புடன், தங்கத்தால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பொருள், ஒரு ரூபாய் நாணயம் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து முடிந்து குலதெய்வத்தை வேண்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். (கல் உப்பு, ஒரு ரூபாய் நாணயம், தங்கத்தால் செய்யப்பட்ட பொருள்.)

- Advertisement -

உங்களுடைய கடன் பிரச்சனை, பணப்பிரச்சனை தீர வேண்டுமென்று குலதெய்வத்திடம் மனதார நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும். மாலை 6 மணிக்கு முன்பு உங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் இந்த முடிச்சினை தயார் செய்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.

praying-god1

இன்று செவ்வாய்க்கிழமை. இன்றிலிருந்து மூன்றாவது நாள், அதாவது வியாழக்கிழமை காலை உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஒன்று ஏற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சை அவிழ்த்து ஒரு ரூபாய் நாணயத்தை அருகில் இருக்கும் கோவில்களின் உண்டியலில் சேர்த்து விடலாம். அப்படி இல்லை என்றால் அந்த காசுக்கு கற்பூரத்தை வாங்கி இறைவனுக்கு தீபம் ஏற்றி விடுங்கள். அந்த தங்க நகையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

salt

மஞ்சள் துணியில் இருக்கும் உப்பை மட்டும், ஒரு சிறிய பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில், உங்கள் கைகளாலேயே எடுத்து கரைக்கவேண்டும். உங்களுடைய கஷ்டங்கள் கரைந்து போக வேண்டும் என்று குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து விட்டு தண்ணீரில் உப்பை கரைத்து விடுங்கள். நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்களுக்கு சீக்கிரமே விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -