வேண்டிய வரம் கிடைக்க அமாவாசை பூஜை

amavasai lakshmi poojai
- Advertisement -

அடிப்படை தேவைகள் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய ஒரு விஷயம்தான். படிக்கின்ற பிள்ளைக்கு படிப்பு என்பது அடிப்படை தேவையாக இருக்கும். வேலைக்கு செல்ல நினைப்பவர்களுக்கு நல்ல வேலை, அதே போல் நல்ல சம்பளத்துடன் வேலை என்பதும் அடிப்படை தேவையாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன், திருமணம் ஆனவர்களுக்கு நல்ல குழந்தை பிறப்பது என்பது அடிப்படை தேவையாக இருக்கும்.

இப்படி நம்முடைய வாழ்க்கையில் பல அடிப்படைத் தேவைகள் நம்முடைய சூழ்நிலைக்கேற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும். இப்படி இருக்கக்கூடிய அனைத்து விதமான அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஆற்றல் மிகுந்த தெய்வமாக அஷ்ட லக்ஷ்மிகள் திகழ்கிறார்கள். வீரம் தைரியம் சந்தானம் தனம் தானியம் என்று அனைத்திற்கும் அதிபதியாக திகழக்கூடிய அஷ்ட லட்சுமிகளை அமாவாசை தினத்தில் எந்த முறையில் பூஜை செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

அமாவாசை தினத்தன்று அஷ்ட லட்சுமிகளையும் அஷ்டலட்சுமிகளுடன் சேர்த்து குபேரடையும் நாம் பூஜை செய்யும் பொழுது நம்முடைய தேவைகள் அனைத்தும் விரைவிலேயே பூர்த்தி அடையும் என்று கூறப்படுகிறது. அமாவாசை தினத்தன்று காலையில் முன்னோர்களின் வழிபாட்டை நாம் செய்வோம். இந்த லட்சுமி குபேரர் பூஜையை அமாவாசை தினத்தன்று மாலை 6 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். மாலை நேரத்தில் வாசலை தெளித்து கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.

வீட்டு பூஜை அறையில் ஒரு மரப்பலகையை வைத்து அதற்கு மேல் பச்சரிசி மாவினால் கோலம் போட்டு சந்தனம் குங்குமம் வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அந்த மனையில் லஷ்மி குபேரர் படத்தை வைக்க வேண்டும். இந்த படத்தையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நமக்கு இந்த பூஜைக்கு தேவைப்படக்கூடிய மிகவும் முக்கியமான ஒரு பொருளாக திகழ்வதுதான் வில்வ காய்.

- Advertisement -

நல்ல வில்வ காயாக பார்த்து வாங்கி அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து அதற்கும் சந்தனம் குங்குமம் வைத்து ஒரு சிறிய தாம்பாளத்தில் வைத்து லட்சுமி குபேரர் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். இந்த பூஜைக்கு அடுத்ததாக வில்வ இலை, துளசி இலை, மல்லிகைப்பூ, ரோஜா பூ என்று அர்ச்சனை செய்வதற்கு ஏற்றவாறு உதிரி பூக்கள் வேண்டும். இதோடு பச்சரிசியில் மஞ்சளை கலந்த அச்சத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்யும் பொழுது உபயோகப்படுத்துவதற்காக 108 ஒரு ரூபாய் நாணயங்களையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து இரண்டு மலர்களையும் அச்சத்தையும் வைத்து இந்த பூஜை நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு குபேருக்கு உதிரி பூக்களால் 108 போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கு ஒரு ரூபாய் நாணயம், வில்வ இலை, மலர் சேர்த்து 108 போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்யும் மலர்கள் வில்வ காயில் படும்படி அர்ச்சனை செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய், ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விட வேண்டும்.

மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் முதல் நாள் செய்த அர்ச்சனை மலர்கள் அனைத்தையும் தனியாக எடுத்து வைத்துவிட்டு புதிதாக மலர்களை வைத்து விளக்கேற்றி கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். பூஜையில் வைத்த வில்வ காயுடன் அர்ச்சனை செய்த வில்வ இலைகளையும் சேர்த்து மஞ்சள் நிற துணியில் மூட்டையாக கட்டி பணம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். மற்ற மலர்களை கால்படாத இடத்தில் வைத்து விடலாம். ஒரு ரூபாய் நாணயங்களையும் பணம் நகை இருக்கும் இடத்தில் எடுத்து வைத்து விட வேண்டும். அன்றைய தினம் ஏதாவது இரண்டு சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து தங்களால் இயன்ற ஏதாவது பொருட்களை தானமாக தரவேண்டும்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி பிரச்சினை தீர

இந்த முறையில் மாதா மாதம் நாம் லட்சுமி குபேரர் பூஜையை அமாவாசை தினத்தில் செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் நாம் என்ன வரம் வேண்டி இந்த பூஜையை மேற்கொண்டோமோ அந்த வரம் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பண வரவும் அதிகரிக்கும்.

- Advertisement -