அமாவாசைக்கு மறுநாள் இதை மட்டும் செய்தால் போதும். கடுமையான கடன் கரையத் தொடங்கும். கஷ்டங்கள் காணாமலே போய்விடும்.

amavasai3

இன்றைய சூழ்நிலையில் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் படிப்படியாக உயர்ந்து கொண்டே தான் செல்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. இந்த கடன் பிரச்சனையிலிருந்து எப்படிதான் வெளிவருவது என்று குழம்பி கொண்டிருப்பவர்களுக்கு தாந்திரீக ரீதியான ஒரு பரிகாரத்தை தான், இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்று அமாவாசை. அமாவாசைக்கு மறுநாள் இந்த பரிகாரத்தினை செய்ய வேண்டும். அதாவது நாளைய தினம் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து வரும் பட்சத்தில், உங்களுடைய கடன் படிப்படியாக குறையத் தொடங்கும். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். கஷ்டங்கள் காணாமல் போவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது. நம்பிக்கையோடு இதை செய்யும் பட்சத்தில்.

salt

மந்திரங்கள், பூஜை புனஸ்காரங்கள் என்று எந்த ஒரு பெரிய விஷயத்தையும் நீங்கள் செய்ய வேண்டாம். நாளை அதிகாலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான கல் உப்பை எடுத்து தனியாக பூஜை அறைக்கு கொண்டு வாருங்கள்.

பூஜை அறையில் ஒரு சுத்தமான விரிப்பை விரித்து விடுங்கள். அதன் மேல் நீங்கள் அமர்ந்து கொண்டு பாத்திரத்தில் இருக்கும் கல் உப்பை உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு உள்ளங்கைகளிலும், கைப்பிடி அளவு உப்பு இருக்க வேண்டும்.

deepam2

தியானம் செய்வது போல சம்மணம் போட்டு நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். தரையில் அமர்வது சிறப்பானது. தரையில் அமர முடியாதவர்கள், வயதானவர்கள் இந்த வேண்டுதலை வைக்க வேண்டுமென்றால் நாற்காலியின் மீது அமர்ந்து கொள்ளலாம். தவறு கிடையாது. உங்களுடைய முதுகு கழுத்து நேராக இருக்க வேண்டும்.

- Advertisement -

இரண்டு கைகளை உங்களுடைய தொடை பகுதியின் மீதோ அல்லது உங்கள் மடியிலோ, உங்கள் சவுகரியம் போல எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் தியானம் செய்த நிலையில் அமர போகிறீர்கள் அவ்வளவுதான். எந்த கடவுள் மிகவும் பிடிக்குமோ, அந்த கடவுளை நினைத்துக் கொண்டு கடன் சுமை குறைய வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும்.

meditation

பிரார்த்தனையும் நீங்கள் செய்யக்கூடிய இந்த தியானமும் மிகவும் ஆழ்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதாவது நம்பிக்கையோடு நீங்கள் வைக்கக்கூடிய இந்த வேண்டுதல் தான் உங்களுடைய கஷ்டத்தை குறைக்க போகின்றது. 10 லிருந்து 15 நிமிடங்கள் உங்களுடைய வேண்டுதலை முடித்துவிட்டு உங்களுடைய இரண்டு கைகளில் இருக்கும் உப்பைக் கொண்டு போய் அப்படியே தண்ணீரில் கரைத்து விடுங்கள்.

kadan

தொடர்ந்து ஐந்து அம்மாவாசை வரும்போது, அமாவாசைக்கு மறுநாள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றத்தை நீங்களே உணரலாம். நிச்சயமாக கடன் சுமை படிப்படியாகக் குறையத் தொடங்கும் பண வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். ஒரே நாளில் எந்த பரிகாரத்தை செய்தும் நம்முடைய வாழ்க்கை நிலையை மாற்றி விட முடியாது. நம்பிக்கையோடு இப்படி வேண்டுதலை தொடர்ந்து வைத்துப் பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.