உங்களின் எதிரிகள் ஒழிய, நன்மைகள் உண்டாக இதை துதியுங்கள்

ambigai

மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மனதில் கீழான எண்ணங்களை அதிகம் வளர்த்து கொண்டு பிறர் மீது பல காரணங்களுக்காக பகை கொண்டு திரிகின்றனர். ஒவ்வொருவரும் அவர்களுக்குள் இருக்கின்ற தீய குணங்கள், எண்ணங்கள் ஆகியவற்றை ஒழித்து விட்டாலே புறத்தில் இருக்கும் எதிரிகள் அனைவரும் ஒழிந்து விடுவார்கள். அத்தகைய சக்தி “அம்பிகை துதி” இதோ.

siva-parvathi

அம்பிகை துதி

தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்- வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்- பார் எங்குமே.

kaligambal

திருக்கடையூரில் அபிராமியாக கோயில் கொண்டிருக்கும் அம்பிகையை போற்றி அபிராம பட்டர் இயற்றிய துதி இது. அம்பிகையின் அருளை தரும் இந்த துதியை தினமும் காலையில் துதிப்பாதால் நமது உடல் மற்றும் மனம் தூய்மையடையும். அம்பிகையின் வழிபாட்டிற்குறிய வெள்ளிக்கிழமைகளில் இந்த துதியை துதிப்போர்களுக்கு அவர்களிடம் இருக்கும் தீய குணங்கள் நீங்கும். நேரடியாகவும், மறைமுகமாகவும் தொல்லை தரும் எதிரிகள் நீங்குவர். உங்களை நோக்கி நேர்மறையான சக்திகள் ஈர்க்கப்படும்.

அபிராமி அம்பிகையே! உன்னுடைய புகழைப் பாடி, உன்னை வணங்காவிட்டாலும்கூட பரவாயில்லை. ஆனால், மின்னலைப் பழிக்கும் ஒளியுடன் பிரகாசிக்கும் உன்னுடைய அருள் வடிவத்தை ஒரு நொடிப் பொழுதாவது நினைக்காதவர்கள், தாங்கள் பெற்றிருக்கும் செல்வம், வள்ளல்தன்மை, குலச் சிறப்பு, உயர் கல்வி ஆகிய அனைத்தையும் இழந்து, வாழ்க்கையில் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என்பதே இந்த மந்திர துதியின் பொருளாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
குழந்தை பாக்கியம் உண்டாக மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:

Here we have Ambigai thuthi in Tamil. It is also called as Ambika mantra in Tamil or Parvathi mantras in Tamil or Ambigai slokam in Tamil or Ethirigal oliya manthiram in Tamil.