உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக, கிரக தோஷங்கள் நீங்க இதை துதியுங்கள்

Anjaneya mantra in Tamil

நாம் வாழும் இந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாத தினம் என்று எதுவும் கிடையாது. இவற்றில் பல பிரச்சனைகள் நமது விதியை தீர்மானித்து இயக்கும் நவகிரகங்களின் தோஷங்கள் மற்றும் நம்மையே அல்லது நாம் இருக்குமிடத்தை பீடித்திருக்கும் எதிர்மறை சக்திகளின் காரணமாகவே ஏற்படுகின்றன. தீயவற்றை அழிக்கும் உக்கிர தெய்வமாகவும், காக்கும் கடவுளாகவும் இருப்பவர் “ஸ்ரீ அனுமன்”. அவரை போற்றும் அனுமன் துதி இதோ.

hanuman

அனுமன் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே

ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே
ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

hanuman

வானர தலைவன் வீர கேசரி அஞ்சனா தேவியின் மைந்தனான அனுமனின் புகழ் பாடும் துதி இது. இந்த துதியை தினமும் காலை, மாலை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் 27 முறை முதல் 108 முறை வரை துதிப்பது நல்லது. செவ்வாய், சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று அனுமன் சந்நிதியில் அனுமனுக்கு தீபம் ஏற்றி இந்த துதியினை படித்து வந்தால் உங்களை பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள், கிரக தோஷங்கள் நீங்கும். தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். தைரியம், மனஉறுதி ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்வார் அனுமன்.

- Advertisement -

Lord Hanuman

வானர இனத்தின் தலைவனாகிய கேசரி மற்றும் அஞ்சனா தேவியின் மைந்தனாக சிவபெருமானின் அம்சம் கொண்ட அனுமன் பிறந்தார். ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரின் மற்றொரு உடன்பிறவா சகோதரகவே ஸ்ரீ அனுமன் கருதப்படுகிறார். பக்தி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு சிறந்த உதாரணமாக இன்றும் கூறப்படுகிறார் அனுமன். அப்படியான அனுமனை நாம் வழிபடுவதால் நமக்கு சகல பாக்கியங்களும் உண்டாகிறது.

இதையும் படிக்கலாமே:
சுக பிரசவம் உண்டாக செய்யும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Hanuman thuthi in Tamil. It is also called as Hanuman mantra in Tamil or Anjaneyar slokam in Tamil or Anjaneyar thuthi in Tamil or Hanuman manthirangal in Tamil.