ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்முறை

briyani recipe
- Advertisement -

உணவு வகையில் மிகவும் பிரபலமாக பேசப்படுவது பிரியாணி தான். முன்பெல்லாம் ஏதாவது ஒரு இடத்தில் தான் பிரியாணி கிடைக்கும். அதனால் பிரியாணி என்றாலே ஆச்சரியமாக கேட்பார்கள். இப்போது எங்கு திரும்பினாலும் பிரியாணி கிடைகிறது. இப்போதும் பிரியாணி என்றால் அதற்கென ஒரு ஈர்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

இந்த பிரியாணியில் பல வகைகள் இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான சுவை மிக்க பிரியாணிகள் கிடைக்கின்றது. இது அந்த ஊரின் பெருமையை சொல்லும் வகையிலே இருக்கிறது. அந்த வகையில் ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றவையே. அந்த பிரியாணியை நாம் வீட்டில் சுலபமாக எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி – 1கப்,
சிக்கன் – 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
பெரிய தக்காளி – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி விழுது -1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 10,
நெய் -1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி – 1 கைப்பிடி,
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை- தலா 2
எலுமிச்சை பழம் – பாதி அளவு.

செய்முறை
பிரியாணி செய்வதற்கு முன்பாக சீரக சம்பா அரிசியை ஒரு முறை தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு அரை மணி நேரம் நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். அதே போல் சிக்கனை சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்து விடுங்கள். காய்ந்த மிளகாய் சுடு தண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து ஊற வைத்து தண்ணீரை ஊற்றி மிக்ஸியில் நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் குக்கர் வைத்து சூடானவுடன் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி காய்ந்த பிறகு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொரிய விட வேண்டும். அதன் பிறகு பூண்டு பேஸ்ட்டை மட்டும் சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பிரியாணி செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய முதல் குறிப்பு இது.

அதன் பிறகு நறுக்கிய வெங்காயத்தையும் உப்பையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள். இந்த பூண்டு விழுதுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கிய பிறகு இஞ்சி விழுதை சேர்க்க வேண்டும். இப்போது இஞ்சி விழுது நன்றாக வதங்கிய பிறகு, தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும். இஞ்சி பேஸ்ட்டை தனியாக சேர்த்து வதக்குவது தான் இந்த பிரியாணி செய்வதில் உள்ள இரண்டாவது குறிப்பு.

- Advertisement -

அடுத்து கொத்தமல்லி புதினா அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு அரைத்து வைத்து காய்ந்த மிளகாய் பேஸ்ட்டை இதில் சேர்க்க வேண்டும். இதில் காரத்திற்கு இந்த பேஸ்ட்டைத் தவிர வேறு எதுவும் சேர்க்கக் கூடாது. இது மூன்றாவது குறிப்பு.

இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு சுத்தம் செய்து வைத்த கறியை இதில் சேர்த்து பிறகு தயிர் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து விடுங்கள். கறியில் இந்த மசாலாக்கள் எல்லாம் நன்றாக ஊறி வதங்க வேண்டும். அதன் பிறகு ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கர் மூடியை போட்டு விடுங்கள் விசில் போட வேண்டாம்.

இந்த நேரத்தில் அடுப்பின் இன்னொரு புறம் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்த பிறகு ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்க வேண்டும் . இத்துடன் கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த அரிசி இரண்டு நிமிடம் வரை கொதித்தால் போதும். அதன் பிறகு எடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்து விடுங்கள். அரிசி முழுவதுமாக வெந்து இருக்கக் கூடாது.

இதையும் படிக்கலாமே: வித்தியாசமான சுவையில் காலிஃப்ளவர் அல்வா

பத்து நிமிடம் கழித்து குக்கரில் இந்த அரிசியையும் சேர்த்து மூடி போட்டு இப்போது விசில் போட்டு விடுங்கள். அப்படியே மிதமான தீயில் 10 நிமிடம் வரை இருக்கட்டும். அதன்பிறகு அடுப்பை அணைத்து விட்டு விசில் இறங்கிய பிறகு குக்கரை திறந்து பாருங்கள். நல்ல கம கம வென்ற வாசத்துடன் ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயார்.

- Advertisement -