அம்மன் கோவிலிலிருந்து பிரசாதமாக கொடுத்த எலுமிச்சம்பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து இப்படி மட்டும் செய்யவே கூடாது. அது நம் குடும்பத்திற்கு தீராத கஷ்டத்தை கொடுத்துவிடும்.

amman1
- Advertisement -

பொதுவாகவே அம்மன் வழிபாடு என்றால் அதில் முதலிடம் பிடிப்பது இந்த எலுமிச்சம்பழம். எலுமிச்சம் பழத்தை வாங்கி கோவிலில் கொடுத்து, அம்பாளின் மடியில் வைத்து பூஜை செய்து வீட்டிற்கு கொண்டு வரும் பழக்கம் பெரும்பாலும் நம் எல்லோரிடத்திலும் இருக்கும். அந்த எலுமிச்சம்பழத்தை நம் வீட்டிற்கு கொண்டு வந்து என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, என்பதை பற்றியும் அம்மன் கோவிலுக்கு குறிப்பாக எந்த இரண்டு பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

elumichai-palam

முதலில் அம்மன் கோவிலில் இருந்து வாங்கி வந்த எலுமிச்சம்பழத்தை என்ன செய்யலாம் என்று பார்ப்போம். பொதுவாகவே கோவிலில் இருந்து நாம் கொண்டு வந்து வீட்டில் வைக்கக் கூடிய பழம் அழுகிப் போகக் கூடாது என்று சொல்வார்கள். அழுகிப் போனால் சாஸ்திரப்படி அது நம்முடைய வீட்டிற்கு கெடுதலை கொடுக்கும். ஒருவேளை கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பழம் உங்களுடைய பூஜை அறையில் வைத்து அழுகி விட்டால் அதைக் கொண்டு போய் உடனே குப்பைத் தொட்டியில் போட்டு விட வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் கெடுதலை அந்தப் பழம் உறிஞ்சி விட்டது என்றுதான் அர்த்தம். எக்காரணத்தைக் கொண்டும் அழகிய எலுமிச்சம் பழத்தினை பூஜை அறையில் வைக்க கூடாது. அது எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பழத்தை பூஜை அறையில் வைத்து அது காய்ந்து போனதும் அதைக் கொண்டு போய் குப்பை தொட்டியில் போடுவது அம்மனையே கொண்டு போய் குப்பையில் போடுவதற்கு சமம். முடிந்தவரை கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட எலுமிச்சையை ஒருநாள் இரவு மட்டும் பூஜை அறையில் வைத்து விட்டு, மறுநாள் அந்த பழத்தை வெட்டி சாறு பிழிந்து பிரசாதமாக வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் குடித்து விடுவது மிகவும் நல்லது.

kamatchi-amman8

அம்மன் மடியில் இருந்து எடுத்து வந்த பழத்தை இப்படி பிரசாதமாக நாம் உட்கொள்ளும் போது நம் உடலில் இருக்கும் பிணியும் நீங்கும். நம் உடலில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலும் விலகும். இது ஆடி மாதம் நிறையபேர் அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை அணிவிப்பார்கள். இப்படியாக அம்மனுக்கு செலுத்திய மாலையை நீங்கள் மீண்டும் வாங்கி, அந்த மாலையில் இருக்கும் ஒவ்வொரு எலுமிச்சம் பழத்தையும் கோவிலில் வரும் பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுப்பது மேலும் சிறப்பினைத் தரும்.

- Advertisement -

அடுத்தபடியாக நம்முடைய சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மிக மிக முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம். அம்மன் கோவிலுக்கு செல்லும் போது இந்த இரண்டு பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம். அது என்னென்ன பொருள். ‘நெல்லிக்காய்’ பெரிய நெல்லிக்காய் வாங்கிக்கொண்டு நம் அம்மனை தரிசனம் செய்ய செல்லக்கூடாது. அடுத்தபடியாக சொல்லப்படுவது எருக்கன் பூ. எருக்கன் பூவை எடுத்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்யக்கூடாது.

nellikai

இந்த இரண்டு பொருட்களை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றால் என்ன நடக்கும். வழிபாட்டில் தடை நடக்கும். வேண்டுதல் நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதுவரை அறியாமல் நீங்கள் இந்த தவறுகளை செய்திருந்தால் அதை நினைத்து பயப்பட வேண்டாம். அறியாமல் செய்த தவறுக்கு எப்போதுமே அம்பாளிடம் மன்னிப்பு உண்டு. சாஸ்திரம் சொல்வதை கேட்டு நடந்தால் நல்லது மட்டுமே நடக்கும். சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இந்த விஷயங்களை பின்பற்றிக் கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -