குலதெய்வ கோவிலில் இந்த வழிபாடு செய்தால் உங்கள் குலத்திற்கு நல்லது மட்டுமே நடக்கும். கெடுதல் உங்கள் குடும்பத்தை நெருங்க கூட முடியாது.

amman3
- Advertisement -

உங்களுடைய வீட்டு குலதெய்வம் எந்த தெய்வமாக இருந்தாலும் சரி, நீங்கள் அம்மாவாசை அன்று குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்வது குடும்பத்திற்கு மிக மிக நல்லது. அதிலும் குறிப்பாக உங்களுடைய குலதெய்வம் அம்மன் தெய்வமாக இருந்தால் பின் சொல்லக்கூடிய முறையை பின்பற்றி வழிபாடு செய்வதன் மூலம், உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். காரியத்தடை விலகும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். பெரிய அளவில் எந்த தீய சக்தியாலும் உங்கள் குடும்பத்திற்கு கெடுதல் செய்யவே முடியாது. அருள்தரும் அம்மன் குலதெய்வ வழிபாடு இதோ உங்களுக்காக.

அம்மன் குலதெய்வ வழிபாடு:
அம்மாவாசை தினத்தில் உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டும். உங்கள் வீட்டு முறைப்படி அந்த அம்மனுக்கு எப்படி வழிபாடு செய்வீர்களோ, அதை செய்ய வேண்டும். பொங்க வைத்து, அபிஷேகம் செய்து, புடவை சாத்தி, உங்கள் வீட்டுப் பழக்கம் எதுவோ அதை முறைப்படி அங்காளி பங்காளிகளுடன் ஒற்றுமையாக செய்து முடித்து விடுங்கள்.

- Advertisement -

வீட்டின் குடும்ப தலைவி இருப்பார்கள் அல்லவா, அந்த குடும்பத் தலைவி தான் தன் குடும்பத்திற்காக வேண்டுதல் வைக்க வேண்டும். அவர்களுடைய கையில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொண்டு, கோவில் பிரகாரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து, உங்கள் குடும்பத்திற்கு தேவையான வேண்டுதலை வையுங்கள். ஏதாவது ஒரு விஷயம் நிச்சயம் இது நிறைவேற வேண்டும் என்று இருக்கும்.

தன்னுடைய பிள்ளைக்கு திருமணம் வேண்டும் அல்லது குழந்தை வரம் வேண்டும். இல்லை பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். கணவருக்கு உடல்நிலை சரியில்லை. வருமானம் இல்லை, கடன் தொல்லை, என்று உங்கள் குடும்பத்தில் முதலில் தீர்க்கப்பட வேண்டிய பெரிய பிரச்சனை எது. அதை முதல் வேண்டுதலாக  அம்பாளிடம் மனம் உருகி சொல்லி கையில் இருக்கும் ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் அம்மன் கோவிலில் கட்டாயமாக சூலாயுதம் இருக்கும். அதில் சொருகிவிட்டு வந்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு அந்த அம்மன் கோவிலை ஐந்து முறை வலம் வந்து கொடிமரத்துக்கு கீழே குடும்பத்தோடு நமஸ்காரம் செய்து வணங்கி வழிபாட்டை நிறைவு செய்து கொண்டால் உங்கள் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். அம்மாவாசை அன்று இந்த வழிபாட்டை செய்வது மிக சிறப்பான பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் என்னும் தீராத துன்ப கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருப்பவர்கள் சோமவார பிரதோஷத்தன்று இதைத் தவறாமல் செய்தால் நிச்சயம் உங்கள் கடன் அடைந்தே தீரும்.

இந்த வழிபாட்டை தொடங்குவதற்கு முன்பு கட்டாயமாக குலதெய்வ கோவிலில் இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும் மறக்காதீங்க. தீப வழிபாடு ஒன்றுதான் குடும்பத்திற்கு பிரகாசத்தை கொடுக்கும். குலதெய்வ கோவிலுக்கு சென்றால் விளக்கு ஏற்றாமல் வரக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுடைய குடும்பத்திற்கு பல கோடி நன்மைகளைத் தேடித் தரும். நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -