அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் இதை மட்டும் செய்தால் வருமானம் பலவழிகளில் வந்து சேரும் தெரியுமா?

amman-abishegam-temple

தேவைக்கு ஏற்ப வருமானம் இல்லாமல் நிறைய பேர் கடன் வாங்கும் சூழ்நிலையில் தள்ளப்படுகிறார்கள். கடனுக்கு கடன் என்று கடைசியில் வட்டி கூட கட்ட முடியாமல் நிறைய பிரச்சனைகளையும், அவமானங்களையும், மன உளைச்சலையும் சந்திக்க வேண்டி வரும். எங்கோ இருக்கும் கோவில்களுக்கு சென்று வழிபட நினைக்கும் நீங்கள் அருகில் இருக்கும் அம்மன் கோவிலை மறந்து விடுகிறீர்கள். ஒரு ஊரில் நீங்கள் குடி இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய எல்லை தெய்வமாக நிச்சயம் ஒரு அம்மன் காட்சி தருவாள். நம் தாய் திருநாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு அம்மன் கோவில் நிச்சயம் எழுப்பப்பட்டுள்ளது. அம்மன் இல்லாத ஊர் நிறைய சிரமங்களை சந்திக்கும்.

kathayee-amman

ஒரு குழந்தைக்கு எப்படி தாய் முக்கியமோ! அதே அளவிற்கு ஒரு ஊருக்கு அம்மன் கோவில் முக்கியம் என்பார்கள். எல்லா ஊரிலும் நிச்சயமாக அம்மன் கோவிலில் இல்லாமல் இருக்கப் போவதில்லை. அந்த அம்மன் கோவிலில் இப்படி செய்து வழிபட்டால் உங்களுக்கு இருக்கும் மனக்கஷ்டங்கள், பணக் கஷ்டங்கள் நிச்சயம் தீரும் என்பது நியதி. இது பலருக்கும் தெரியாத விஷயமாகவே இதுவரை இருந்து வருகிறது.

ஒருசிலர் எல்லாம் அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபடுவதை நாம் பார்த்திருப்போம். இவர்கள் விசேஷ நாட்கள் மட்டும் அல்லாமல் சாதாரண தினத்தில் கூட பொங்கல் வைத்து பக்தர்களுக்கு பிரசாதம் அளிப்பார்கள். அது ஏன் தெரியுமா? அதைத் தெரிந்து கொள்வதற்கு தான் இந்த பதிவு உங்களுக்கு பயன்படப் போகிறது.

Masani Amman Temple

அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் தெய்வமானது எந்த அம்மன் தாயாக இருந்தாலும், அதாவது எந்த பெயரில் இருந்தாலும், அவள் உக்ரமான தெய்வமாக இருந்தாலும் கூட நீங்கள் பொங்கல் வைத்து, படையல் போட்டு, வழிபாடு செய்தால் வருமானம் பெருகும் என்பது நம்பிக்கை. கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில் கூட அம்மனை வேண்டி வழிபட்டால் நிச்சயம் நல்லது நடக்கும். இதை அறிந்தவர்கள் தான் எல்லா அம்மனுக்கும் உகந்த செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். அதை முறையாக எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

- Advertisement -

முதலில் உங்களுக்கு இருக்கும் மனக்குறைகளை தீர்க்க வேண்டுதல் வைக்க வேண்டும். அதாவது உங்கள் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு நீங்கள் செல்லும் பொழுது உங்கள் கஷ்டம் தீர முதலில் முழு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுத்த வாரத்தில் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் அதே கோவிலுக்கு படையல் வைக்க தேவையான பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டு செல்ல வேண்டும்.

amman

பொங்கல் வைப்பதற்கு, மற்றும் புளியோதரை கூட செய்யலாம். தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு மாலை வேளையில் கோவிலுக்கு சென்று பக்தர்கள் அதிகம் வருவதற்குள் நல்ல நேரத்தில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். அபிஷேகம் செய்யும் பொழுது முழு மனதாக நம்பிக்கையோடு உங்களுடைய வேண்டுதல்களை அம்பாளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

mari-amman1

பின்னர் படையலுக்கு தேவையான உணவை தயாரிக்க வேண்டும். அம்பாளுக்கு படையலை படைத்து விட்டு பின்னர் அங்கு வரும் பக்தர்களுக்கு அதனை பிரசாதமாக வழங்க வேண்டும். முதல் வாரம் இதை செய்த பின் அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் ஒரு முறையாவது அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்ய வேண்டும். இப்படி செய்து வர அடுத்த சில மாதங்களிலேயே உங்களுடைய மன குறைகள் நீங்கும். நினைத்தது அப்படியே பலிக்கும் என்பது நம்பிக்கை.

pongal-temple

இதை காலம் காலமாக நம்முடைய முன்னோர்கள் முதல் நிறைய பேர் பின்பற்றி வழிபட்டு வருகின்றனர். ஆனால் சிலருக்கோ இதைப் பற்றிய தகவல்கள் தெரியாததால் அவற்றைப் பின்பற்றுவது இல்லை. உங்களுடைய ஊருக்கு அவள் தான் தாய். அந்த தாயே அவள் ஊரில் இருக்கும் பக்தர்களை காக்க கூப்பிட்டவுடன் உடனே ஓடோடி வருவாள் என்பது சாஸ்திர உண்மை. விஷயம் தெரியாதவர்கள் இனி தெரிந்து கொண்டு நாலு பேருக்கு தெரிய வைத்து அம்பாளின் அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
ஆண்கள் இந்த கைகளால் இவர்களுக்கு இதை மட்டும் தானம் கொடுத்தால் தீராத துன்பம் எல்லாம் நொடியில் தீரும்? என்ன தானம் அது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.