ஆண்கள் இந்த கைகளால் இவர்களுக்கு இதை மட்டும் தானம் கொடுத்தால் தீராத துன்பம் எல்லாம் நொடியில் தீரும்? என்ன தானம் அது?

vasthira-dhanam2

பொதுவாகவே தானம் கொடுப்பது என்பது புண்ணியத்தை சேர்க்கும். ஆண், பெண் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் தானமாகக் கொடுக்கலாம். அதில் சில கிழமைகளை தவிர்த்து மற்ற கிழமைகள் உகந்தவையாக கருதப்படுகின்றன. அதாவது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த வகையில் ஆண்கள் இவர்களுக்கு இந்த பொருளை மட்டும் தானமாக வழங்குவதன் மூலம் தீராத துன்பம் எல்லாம் நொடியில் தீரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அப்படியான தானம் என்ன? யாருக்கு? என்பதைத் தான் இப்பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

thanam

பொதுவாக தானத்தை ஆண், பெண் என்கிற பாகுபாடு இன்றி யார் வேண்டுமானாலும் வழங்கலாம். வீட்டிற்கு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை தானமாகக் கொடுத்து வழியனுப்புவது தான் புண்ணியத்தை சேர்க்கும். ஒரு சிலர் எதுவும் இல்லை என்றால் போ.. போ.. என்று விரட்டி அடிப்பார்கள். இது மிகப் பெரும் பாவத்தை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

யாரும் வேண்டுமென்றே தர்மம் என்று பிச்சை கேட்டு வருவதில்லை. இயலாத பட்சத்தில் வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லி அனுப்பினால் உங்களைவிட ஒரு பிச்சைக்காரர் உலகத்தில் யாரும் இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்க. முக்கியமாக தமிழர் பாரம்பரியத்தில் விருந்தோம்பல் முறை என்பது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இல்லாதவர்களுக்கு பசியாற்றவே திண்ணை என்கிற ஒன்றை வீட்டின் முன்னே கட்டி வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

pichai-thanam

அத்தகைய பாரம்பரியத்தில் பிறந்த நீங்கள் இல்லை என்று சொல்லி வழி அனுப்பி வைத்தால் அது தர்மம் அல்ல. வீட்டில் பெண்களாக இருப்பின் உங்களிடம் சாப்பாடு இல்லை என்றாலும் அரிசி, பருப்பு, தானியங்கள், காய்கறிகள் என்று ஏதாவது ஒரு பொருளை கொடுத்து தர்மமாக 10 ரூபாய் கொடுத்தால் கூட பெரும் புண்ணியம் வந்து சேரும்.

- Advertisement -

அவ்வகையில் ஆண்கள் தீராத துன்பங்கள் தீர, ஜாதகத்தில் இருக்கும் கர்ம வினைகள் நீங்க பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உங்களால் முடிந்த ஏழை முதியவர்களுக்கு வஸ்திர தானம் கொடுத்து வாருங்கள். உங்களுடைய பிறந்த நாள் அல்லது மனைவியின், குழந்தையின் பிறந்த நாள் அன்றைய தினத்தில் முதியோர் இல்லத்திற்கு சென்று அல்லது தெரிந்த முதியவர்களுக்கு துணிமணிகள் வாங்கிக் கொடுங்கள்.

old-age-people

உங்களுடைய இரு கரங்களினால் இயலாத முதியவர்களுக்கு வஸ்திர தானம் செய்வது மிகப் பெரும் பாக்கியத்தை உங்களுக்கு கொடுக்கும். ஒரு குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களை விட தலைவனுக்கு இருக்கும் ஜாதக ரீதியான பலன்கள் அந்த குடும்பத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரக தோஷம் நீங்க இந்த ஒரு தானத்தை மட்டும் செய்தால் வீட்டில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

vasthira-dhanam1

குடும்ப பிரச்சினைகள், தொழில் ரீதியான பிரச்சினைகள், வருமான பிரச்சனைகள், திருமண தடை என்று எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது நம்பிக்கை. ஒரு வருடம் செய்து விட்டு அப்படியே விட்டு விடாதீர்கள். உங்களால் முடிந்த பொழுது வருடா வருடம் உங்களுடைய இரு கரங்களினால் முதியோர்களுக்கு வஸ்திர தானம் செய்து வர நீங்களே எதிர்பாராத அளவிற்கு நிச்சயம் மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையிலும் நிகழும் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரியின் நற்பலன்கள்! வேண்டிய வரங்களை பெற, நவராத்திரியின் 8 மற்றும் 9ஆம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.