மற்றவர்கள் அல்லது பெரியவர்கள் உங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்த பணத்தை இப்படி மட்டும் செய்து விடாதீர்கள்! அந்த பணத்தை என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

cash-lakshmi
- Advertisement -

பணம் என்பது நிலையாக நிற்கும் ஒரு பொருளல்ல. இன்று உங்களிடம் இருந்தால் நாளை அந்த பணம் வேறு ஒருவரிடம் இருக்கும். மறுநாள் அது மற்ற ஒருவரிடம் சென்று விடும். இது போல நேரத்திற்கு நேரம் மாறிக் கொண்டிருக்கும் இந்த பணத்தை நோக்கிய பயணத்தில் இருந்து சற்று நாம் நின்று நிதானமாக எதற்காக இந்தப் பிறவியை எடுத்து இருக்கிறோம்? என்று யோசித்தால் எத்தனை நாட்கள் உங்கள் வாழ்நாளில் வீணாகிப் போய் இருக்கிறது என்பதை கண்டு நீங்களே வியந்து போகலாம். இப்படி ஒருபுறம் இருக்க, நாம் சம்பாதித்த பணம் அல்லாமல் மற்றவர்கள் நமக்கு அன்பளிப்பாக அல்லது விருப்பப்பட்டு கொடுக்கும் பணத்தை வைத்து நாம் என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நிலையாக இல்லாத பணத்தை ஒருவர் மற்றவர்களுக்கு எப்பொழுது உள்ளன்போடு கொடுப்பார்கள் தெரியுமா? ஒரு நல்ல நாள், விசேஷம் என்று வரும் பொழுது தன்னுடைய குழந்தைகளுக்கும், தன்னுடைய சந்ததியினருக்கும் அன்புடன் விருப்பப்பட்டு பெரியவர்கள் சிறியவர்களுக்கு கொடுப்பார்கள். அல்லது ஒருவர் வீட்டிற்கு நாம் விருந்தாளியாக செல்கிறோம் என்றால் அந்த வீட்டிற்கு ஏதாவது நாம் வாங்கிக் கொண்டு செல்வோம்.

- Advertisement -

அப்படி வாங்கிக் கொண்டு செல்ல மறந்து விட்டோம் என்றால் அதற்கு ஈடாக நாம் பணத்தை அன்பளிப்பாக கொடுப்போம். பெரியவர்களுக்கு இல்லை என்றாலும் அந்த வீட்டில் குழந்தைகள் இருந்தால் நிச்சயம் அந்த குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த தொகையை கொடுத்து, ஏதாவது வாங்கிக் கொள், என்று கொடுத்து மகிழ்வோம்.

coins

தீபாவளிக்கு தாத்தா, பாட்டிகள் பேரன், பேத்திகளுக்கு அன்பளிப்பு கொடுப்பார்கள். பிறந்த நாளுக்கு குழந்தைகளுக்கு தாய், தந்தையர் அன்பளிப்பு கொடுப்பார்கள். அலுவலகத்தில் அல்லது வேலை செய்யும் ஏதாவது ஒரு இடத்தில் உங்கள் வேலைக்கு பாராட்டி ஊக்கத் தொகையாக முதலாளி சிறிது பணம் கொடுப்பார். அவர்கள் உள்ளம் மகிழ்ந்து நமக்கு உள்ளன்போடு கொடுக்கும் இந்த அன்பளிப்பு பணத்தை நாம் நமக்காக செலவு செய்யக்கூடாது என்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

இப்படி நீங்கள் சம்பாதிக்காமல் உங்களுக்கு அன்பளிப்பாக வரும் பணத்தை வைத்து மற்றவர்களுக்கு நீங்கள் தானம் கொடுப்பதன் மூலம் கோடி கோடி மடங்கு புண்ணியம் உங்களுக்கு வந்து சேருமாம். நாம் சம்பாதித்த பணத்தின் மூலம் நாம் தான, தர்மங்களை செய்தால் அது நமக்கு மட்டுமே பலன் அடைய செய்யும். ஆனால் இப்படி ஒருவர் அன்பளிப்பாக கொடுத்த பணத்தை நாம் தான, தர்மம் செய்தால் அது நமக்கு மட்டுமல்லாமல், நமக்கு அன்பளிப்பு கொடுத்தவருக்கும் சேர்த்து பலன்களை வாரி வழங்கும்.

cash

எனவே ஒருவரிடமிருந்து உள்ளன்போடு நமக்குக் கிடைக்கும் பணத்தை வைத்து நாம் மட்டும் இன்பமாக இல்லாமல், ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் நம்மால் முடிந்த மட்டும் அன்னத்தை அல்லது பொருட்களை தானம் கொடுத்து மகிழ்ந்தால் அதன் மூலம் இறைவனை அடைய முடியுமாம். அப்படி மற்றவர்களுக்கு தானம் கொடுக்க முடியவில்லை என்றாலும், நீங்கள் அதனை கோவிலுக்கு செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம். புண்ணியத் தலங்களுக்கு செல்லும் பொழுது அதனை எடுத்துக் கொண்டு செல்லலாம், செலவு செய்யலாம். கோவிலில் இருக்கும் உண்டியலில் சேர்க்கலாம். இப்படி இறைவனுக்கு அல்லது இறைவன் மகிழும் படியான விஷயங்களுக்கு நீங்கள் அந்த பணத்தை செலவு செய்தால் புண்ணிய பலன் இரட்டிப்பாகும்.

- Advertisement -