காரசாரமான ஆந்திரா ஸ்டைல் ‘நல்ல காரம் பொடி’ ஒரு வாட்டி இப்படி செஞ்சு பாருங்க. சுடச்சுட சாதம், இட்லி, தோசைக்கு சூப்பர் சைட் டிஷ் இது.

nalla-kara-podi
- Advertisement -

ஆந்திரா ஸ்டைலில் சூப்பரான நல்ல காரம் பொடி எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தப்பொடி நாம் அறைக்கும் இட்லி பொடியை விட, பருப்புப் பொடியை விட கொஞ்சம் வித்தியாசமானது. இந்த பொடியை அரைத்து வைத்துக் கொண்டால், சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். இட்லி தோசைக்கு, இட்லி பொடி போல தொட்டும் சாப்பிடலாம். உடலுக்கு மிகமிக ஆரோக்கியம் தரக்கூடிய இந்த நல்ல காரம் பொடி எப்படி செய்வது தெரிந்து கொள்வோமா.

nalla-kara-podi2

இந்தப் பொடியை செய்ய தேவையான பொருட்களை முதலில் பார்த்துவிடுவோம். கருப்பு உளுந்து – 1 கப், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், வர மல்லி – 1/2 கப், சீரகம் – 2 ஸ்பூன், வரமிளகாய் – 10 லிருந்து 12, கறிவேப்பிலை – 2 கொத்து, பூண்டு பல் – 5, நெல்லிக்காய் அளவு – புளி, தேவையான அளவு உப்பு. இந்தப் பொருட்களை எல்லாம் தனியாக அளந்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 200கிராம் பிடிக்கும் அளவிற்கு, ஒரு டம்ளரில் மேலே சொன்ன பொருட்களை அளந்து கொண்டால் சரியாக இருக்கும். (கருப்பு உளுந்தில் இந்த பொடி செய்தால் தான் அது உடலுக்கு ஆரோக்கியம்.)

- Advertisement -

அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அது சூடானதும் அதில் அரை ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு முதலில் கருப்பு உளுந்தம் பருப்பை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு உளுந்தை வாயில் எடுத்து போட்டு கடித்தால் உளுந்தை மென்று சாப்பிடும் அளவிற்கு வறுபட வேண்டும். வருத்த இந்த உளுந்தை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

nalla-kara-podi1

அடுத்தபடியாக 1/4 ஸ்பூனுக்கு குறைவாக எண்ணெய் ஊற்றி கடலை பருப்பை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுபட வேண்டும். அடுத்தபடியாக வரமல்லி போட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக சீரகம் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து வர மிளகாயையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து கருவேப்பிலையை கையில் எடுத்து உடைத்தால் உடையும் அளவிற்கு மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயில் இருக்கும் சூட்டிலேயே பூண்டு – 5 பல், நெல்லிக்காய் அளவு புளியை சிறிய துண்டுகளாக பிரித்து போட்டு அந்த சூட்டிலேயே வறுத்து இதையும் தனியாக எடுத்து ஒரு தட்டில் கொட்டி கொள்ளுங்கள். இப்போது இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு 90% மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக இன்னும் ஒரு சிறிய வேலை உள்ளது. ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி அதை அப்படியே அடுப்பில் வைத்து சூடு செய்து, அந்த நெய்யில் பொடித்த இந்த பொடியை கொட்டி இரண்டு நிமிடம் போல நன்றாக சூடு செய்து அதன் பின்பு இந்த பொடியை நன்றாக ஆறவைத்து அதன்பின்பு ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் இதனுடைய சுவையும் மணமும் இன்னும் கூடுதலாக நமக்கு கிடைக்கும்.

podi

கூடுமானவரை இந்த பொடி இரண்டு மாதங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த பொடியை அரைப்பதற்கு பொருட்களை எண்ணெய் ஊற்றி வறுகின்றோம் அல்லவா, அப்படி வறுக்கும் போது எண்ணெய்யை அளவோடு கொஞ்சமாக ஊற்றி வறுக்கவேண்டும். எண்ணெயை நிறைய ஊற்றிப் பொருட்களை வறுத்து விட்டால், பொடி சீக்கிரம் சிக்கு வாடை வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டில் பொடி அரைக்கும் போது நிறைய எண்ணெயை ஊற்றி பொருட்களை வறுத்து விட்டால் பொடியை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். கெட்டுப்போகாமல் எந்த வாடையும் வீசாமல் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா. உங்க வீட்லயும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -