அங்கார கிருத்திகை முருகன் வழிபாடு

murugan maa dheepam
- Advertisement -

கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த கடனிலிருந்து வெளி வருவதற்காக பல முயற்சிகளை செய்தாலும் அந்த முயற்சிகள் வெற்றியடையாமல் போகும் பொழுது முருகப்பெருமானை வழிபட்டால் அந்த முயற்சிகள் வெற்றியடைந்து கடன் தீரும். அப்படி முருகப்பெருமானை வழிபடுவதற்கு மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுவது தான் செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை என்பது அங்கார்களுக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது.

நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் தொடர்பான அனைத்தையும் மேற்கொள்பவர் அங்காரகன் ஆகிய செவ்வாய் பகவான் என்பதால் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபடுவது என்பது சிறப்பு. அதிலும் குறிப்பாக நாளைய தினம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரமும் வருவதால் அன்றைய தினம் நாம் வீட்டில் எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஆங்கார கிருத்திகை

முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக விசாக நட்சத்திரமும், கிருத்திகை நட்சத்திரமும் திகழ்கிறது. முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையாக செவ்வாய் கிழமை திகழ்கிறது. முருகப்பெருமானுக்கு உகந்த இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாளை நாம் தேர்வு செய்து தொடர்ச்சியாக முருகப் பெருமானை மனதார வழிபடும் பொழுது நாம் வைத்த கோரிக்கைகளை முருகப்பெருமான் நிறைவேற்றுவார். அப்படிப்பட்ட முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரமும் கிழமையும் சேர்ந்து வரக்கூடிய நாளைய தினம் முருகப்பெருமானை எப்படி வழிபடுவது என்று தெரிந்து கொள்வோம்.

கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்வதற்கு செவ்வாய்க்கிழமையில் தொடர்ச்சியாக முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பலரும் அறிந்திருப்போம். செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் முருகப்பெருமானை நினைத்து ஒரு பொழுது விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அலங்காரம் செய்து அவருடைய பாடல்களை பாராயணம் செய்து விரதத்தை தொடங்க வேண்டும். இந்த வழிபாட்டை தொடங்குவதற்கு முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டு பிறகு தொடங்குவது என்பது சிறப்பு. பிறகு காலையில் எந்த உணவும் சாப்பிடாமல் மதிய நேரத்தில் தலைவாழை இலை போட்டு மிதமான உணவை சாப்பிட வேண்டும்.

அதில் கண்டிப்பான முறையில் வெங்காயமும் பூண்டும் சேர்ந்திருக்கக் கூடாது. அடுத்ததாக அன்று மாலை வீட்டில் இருக்கக்கூடிய வேல் அல்லது முருகன் சிலைக்கு பசும்பாலால் அபிஷேகம் செய்து மா விளக்கு ஏற்றி முருகப்பெருமானுடைய பாடல்களை பாடி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். வீட்டில் இந்த வழிபாட்டை நிறைவு செய்த பிறகு ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானின் சன்னதிக்கு முன்பாக பச்சரிசி மாவால் நட்சத்திர கோலம் வரைந்து அதில் ஆறு அகல் விளக்குகளை வைத்து கிழக்கு பார்த்தவாறு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒரே ஒருமுறை செய்து விட்டால் கடன் தீருமா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் தீராது. தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொண்டு கடன் தீர்வதற்கான முயற்சிகளையும் நாம் செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அந்த கடன் அடைய முருகப்பெருமான் அருள் புரிவார்.

இதையும் படிக்கலாமே:கடன் தீர பச்சரிசி பரிகாரம்

முருகப்பெருமானின் அருளால் கடன் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானுக்குரிய தினத்தை தவறவிடாமல் அவரை நினைத்து வழிபாடு செய்து கடன் பிரச்சனையில் இருந்து வெளியில் வரலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -