சுவாமி பெயர் வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்பு

god1
- Advertisement -

நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு வேண்டுதலின் காரணமாக சுவாமியின் பெயரை வைத்திருப்போம். நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு கூட சில சுவாமிகளின் நாமத்தில், பெயர் இருக்கும். உதாரணத்திற்கு ஐயப்பன், முருகன், கணேசன், மணிகண்டன், ஹரிஹரன், சிவா இப்படி நிறைய ஆண்களின் பெயரும், திரிபுரசுந்தரி, பவானி, அன்னபூரணி, லட்சுமி, இப்படி பெண்களின் பெயரையும் நம் பிள்ளைகளுக்கு வைப்பது உண்டு.

ஆனால் இப்படி ஏதோ ஒரு தெய்வத்தின் பெயரை ஒரு குழந்தைக்கு வைத்து விட்டோம். வைத்து விட்டால் மட்டும் போதுமா. தினம் தினம் அந்த பெயரை சொல்லும் போது நமக்கு புண்ணியம் வந்து சேரும் அதில் இந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் பெயரை மட்டும் வைத்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது. நாம் வைத்த பெயருக்கு சொந்தமான கடவுளையும் அதற்கு உகந்த நாளில் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

உதாரணத்திற்கு ஹரிஹரன் என்ற பெயரை வைத்திருந்தால், நீங்கள் சனிக்கிழமை தோறும் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். ரொம்ப சின்ன பிள்ளைக்கு ஹரிஹரன் என்ற பெயர் இருக்குது என்னும் பட்சத்தில், சனிக்கிழமை அவர்களுக்கு பெருமாள் வழிபாடு செய்வதை சொல்லிக் கொடுங்கள். சனிக்கிழமை என்றால் பெருமாள் கோவிலுக்கு போகணும்.

இல்லையென்றால் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ‘ஓம் நமோ நாராயணா, கோவிந்தா’ என்ற நாமத்தை சொல்லி பெருமாளை வணங்க வேண்டும் என்று அந்த பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கலாம். நீங்கள் பெரியவர்களாக இருந்தால் இந்த வழிபாட்டை உங்களுடைய வீட்டில் மேற்கொள்ளவும்.

- Advertisement -

இதே போல தான் பிள்ளையார் முருகர் எந்த தெய்வத்தின் பெயர் உங்களுக்கு சூட்டப்பட்டு இருந்தாலும், அந்த தெய்வத்திற்கு உகந்த நாளில் அந்த தெய்வத்தை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது உங்களுக்கு அபரிவிதமான பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. சிவன் பெயரை வைத்திருந்தால் பிரதோஷத்தன்று சிவ வழிபாடு செய்யணும். அம்பாள் பெயர் வைத்திருந்தால் பௌர்ணமி தினத்தன்று அம்பாளை நினைத்து வீட்டில் ஒரு விளக்கு ஏற்றியாவது பெண்கள் வழிபாடு செய்யணும்.

தெய்வத்தின் நினைவாக, தெய்வத்தின் பெயரை பிள்ளைகளுக்கு வைப்பது மட்டும் நம்முடைய கடமை அல்ல. பெயரை வைத்துவிட்டு அந்த தெய்வத்தை மறக்காமல், அந்தந்த தெய்வத்திற்கு உண்டான விசேஷ நாட்கள் வரும்போது நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்போதுதான் நமக்கு உண்டான பலனை முழுமையாக பெற முடியும்.

- Advertisement -

தெய்வத்தின் பெயரை வைத்துக்கொண்டு, அந்தக் கிழமையில், அந்த தெய்வத்தை வணங்காமல் போய்விட்டால் ஏதாவது பெரிய தெய்வ குத்தம் ஆகிவிடுமோ, என்றெல்லாம் பயப்பட வேண்டாம். அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. தெய்வத்தின் பெயரை உங்களுடைய பிள்ளைக்கு வைத்திருந்தும் அவர்கள் இன்னல்களில் சிக்கி வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள் எனும்போது, இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடு அவர்கள் கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வகையில் விடிவு காலத்தை காட்டும்.

இதையும் படிக்கலாமே: குழந்தை வரம் பெற பரிகாரம்

நிச்சயமாக அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும். கஷ்டம் வரும்போது தானே நம்ம பரிகாரத்தை தேடுவோம். உங்களுக்கும் சாமி பெயர் வச்சிருக்காங்களா. நீங்க வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தா மேல் சொன்ன ஆன்மீகம் குறிப்பு உங்களுக்கும் உதவி பண்ணும். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -