அன்னதானம் செய்யும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க. பிறகு அதுவும் ஒரு பாவ கணக்கில் போய்ச்சேர்ந்துவிடும்.

dhanam
- Advertisement -

தானத்திலேயே சிறந்த தானமாக சொல்லப்படுவது அன்னதானம். அன்னதானத்தை முறைப்படி எப்படி செய்ய வேண்டும். அன்னதானம் செய்யும் போது நாம் எந்தெந்த தவறுகளை செய்யக்கூடாது. எந்த தானங்கள் எல்லாம் அன்னதானத்தில் போய்ச் சேரும். என்பதைப் பற்றிய ஒரு சில சாஸ்திர ரீதியான குறிப்புகளை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. சாஸ்திர சம்பிரதாயத்தில் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி பலனடையலாம்.

நிறைய காசு பணம் போட்டு, பெரிய அளவில் செய்யக்கூடிய தானம் மட்டும் தான் அன்னதானம் என்று அர்த்தம் இல்லை. நல்ல தாகத்தோடு தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, ஒரு சொம்பு தண்ணீரை அந்த நேரத்தில் கொடுத்தாலும் அது அன்னதான கணக்கில் தான் போய் சேரும். பசியோடு வரும் முன்பின் தெரியாத யாரோ ஒருவருக்கு வயிறார சாப்பாட்டை பரிமாறுவதும் அன்னதானம் தான். சொல்லப்போனால் இதுவே சிறந்த தானமாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

நாம் சாப்பிட்டு, எச்சில் இலையை கொண்டு போய் குப்பையில் போடுகின்றோம். அந்த இலையில் நாம் மீதம் வைக்க கூடிய ஒரு கைப்பிடி சாப்பாட்டை வாயில்லா ஜீவன்கள் சாப்பிட்டாலும் அது அன்னதானத்தில் போய் சேரும். இதற்காகத்தான் சாப்பிட்டு முடித்த பின்பு இலையில் ஒரு கைப்பிடி அளவு சாதத்தை வைக்கவேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள்.

பிரதிபலனை எதிர்பார்க்காமல் நாம் செய்யக்கூடிய அன்னதானம் ஆனது நமக்கு மட்டும் புண்ணியத்தை சேர்பது கிடையாது. நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் அது புண்ணித்தை சேர்க்கும். அதுவும் எப்படிப்பட்ட புண்ணியம் என்று தெரியுமா? இதுவரை உங்களுடைய மூதாதையர்கள் செய்த பாவம், நீங்கள் செய்த பாவத்திற்கான கர்ம வினையானது உங்களுடைய பிள்ளைகளை தொடராது என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய பிள்ளைகள் சாப்பாட்டிற்காக அடுத்தவர்களிடம் கைநீட்ட கூடிய நிலைமை ஏற்படாது.

- Advertisement -

மனிதர்களுக்கு நாம் எப்படி அன்னதானம் செய்கின்றமோ, அதேபோல வாயில்லா ஜீவன்களுக்கும் தொடர்ந்து அன்னதானம் செய்துவர வேண்டும். நாம் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்யக்கூடிய அன்னதானம் நம் சந்ததியை காக்கும். வாயில்லா ஜீவன்களுக்கு நாம் செய்யக்கூடிய அன்னதானம் ஆனது விஷ ஜந்துக்களிடம் இருந்து நம்மை காக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எப்போது நீங்கள் அன்ன தானம் செய்தாலும் சரி, குடிப்பதற்கு தண்ணீர் சேர்த்து வையுங்கள். காக்கை குருவிகளுக்கு இறை வைப்பதாக இருந்தால் கூட அதன் பக்கத்தில் ஒரு சிறிய கிண்ணத்தில் குடிப்பதற்கு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். மனிதர்களுக்கு அன்னதானம் செய்யும் போது கூடவே தண்ணீரோடு அன்னதானம் செய்தால் மட்டுமே அந்த அன்னதானம் முழுமையடையும் என்று சொல்லப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாமல் நாம் செய்யக்கூடிய அன்னதானம் கூட ஒரு வகையில் நமக்கு பாவத்தைப் சேர்த்துவிடும். இனிமேல் இந்த தவறை பண்ணாதீங்க.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். இதை உணர்ந்து மனசாட்சியோடு யார் செயல்படுகிறார்கள் அவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டம் நிச்சயம் வராது. இதை தான் நம்முடைய தர்ம சாஸ்திரமும் சொல்லி வைத்திருக்கின்றது. மனிதர்கள் எதையுமே நேரடியாகச் சொன்னால் செய்ய மாட்டார்கள். எல்லாவற்றையும் சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆக சொல்லும்போதுதான் அவர்களுடைய மனதில் நல்ல விஷயங்கள் ஆழமாகப் பதிகின்றது. இதற்காக கூட நம்முடைய முன்னோர்கள் பாவக் கணக்கு, புண்ணியக் கணக்கு என்று நமக்கு சொல்லி வைத்திருக்கலாம். எது எப்படியோ நல்ல விஷயங்களை ஆராய்ந்து பார்ப்பதை விட்டுவிட்டு, அதை பின் தொடர்வோமே.

- Advertisement -