ஆப்பம் பஞ்சு போல சாஃப்டா வர இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து அரைச்சா போதும். சமையல் சோடா கூட சேர்க்க வேணா, ஆப்பம் நல்லா மெத்து மெத்துன்னு சாப்பிட சூப்பரா இருக்கும்.

- Advertisement -

இட்லி, தோசை செய்வது போல் இந்த ஆப்பத்தை செய்து விட முடியாது. ஆப்பம் செய்ய மாவு சரியான பதத்தில் இல்லை என்றால் நீங்கள் எப்படி ஊற்றினாலும் ஆப்பம் வரவே வராது. ஆப்ப ஊற்ற வேண்டுமானால் அரிசி, உளுந்து அளவிலிருந்து ஆப்பம் ஊற்றும் கடாய் வரையில் சரியாக இருக்க வேண்டும். ஆப்பம் உப்பலாக வர அதில் கொஞ்சம் சோடா மாவு சேர்த்து தான் செய்வார்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் சோடா மாவு சேர்க்காமலே ஆபத்தை சுவையாக எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1 டம்ளர், பச்சரிசி – 1 டம்ளர், உளுந்து – 1/4 கப், தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், அவல் – 1/4 கப், நைலான் ஜவ்வரிசி – 1ஸ்பூன், உப்பு – 1ஸ்பூன், சர்க்கரை – 1/2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

ஆப்பம் செய்ய அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிய பிறகு, மூன்று மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அவலையும் அதே போல் ஒரு கிண்ணத்தில் சேர்த்து ஒரு முறை தண்ணீர் ஊற்றி அலசி விட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். அவல் ஒரு மணி நேரம் ஊறினாலே போதும். இதுவே தட்டையான அவலாக இருந்தால் பத்து நிமிடம் ஊறினாலே போதும்.

மூன்று மணி நேரம் கழித்து அரிசி உளுந்து இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அவலுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து இரண்டையும் ஒன்றாக அரைத்து மாவில் சேர்த்த பிறகு ஜவ்வரிசியையும், உப்பையும் சேர்த்து மாவை அடித்து வைத்து விடுங்கள். இது எட்டு மணி நேரம் வரை அப்படியே இருந்தால் தான் மாவு நன்றாக புளித்து வரும்.

- Advertisement -

எட்டு மணி நேரம் கழித்து மாவை ஊற்றும் போது சர்க்கரை மட்டும் சேர்த்து ஒரு முறை நன்றாக அடித்து கொள்ளுங்கள். ஆப்ப மாவு தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் தண்ணி அதிகமாக இருக்க வேண்டும் அப்போது தான் ஆப்பம் ஊற்ற சரியாக இருக்கும்.

ஆப்ப ஊற்ற நான் ஸ்டிக் கடாயாக இருந்தால் அப்படியே ஊற்றிக் கொள்ளலாம். ஒரு வேளை இரும்பு கடாயாக இருந்தால் அதை முன்னமே எண்ணெய் தேய்த்து வைத்துப் பிறகு அடுப்பில் வைத்து ஆப்பம் ஊற்றினால் ஆப்பம் ஒட்டாமல் வரும்.

இதையும் படிக்கலாமே: இட்லி, தோசைக்கு பதிலாக 2 கப் கோதுமை மாவு இருந்தா சட்டுன்னு இப்படி மட்டும் செஞ்சு பாருங்க சுவையான ஸ்டஃப்டு கோதுமை ரொட்டி ரெடி! தொட்டுக்க கூட எதுவுமே வேண்டாம்.

அடுப்பை பற்ற வைத்து ஆப்ப கடாய் வைத்து கடாய் சூடானதும் எண்ணெய் தேய்த்து ஆப்ப மாவு எடுத்து ஆப்பம் ஊற்றி எடுக்க வேண்டியது தான். சுவையான பஞ்சி போன்ற சாஃப்ட் ஆப்பம் தயாராகி விட்டது இதனுடன் தேங்காய் பால் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

- Advertisement -