அரிசி மாவு இருந்தால் வெறும் 10 நிமிடத்தில் இந்த அப்பம் செய்திடலாம். சுவையான ஹெல்தி ஸ்நாக்ஸ்.

appam2
- Advertisement -

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விடுமுறையில் வீட்டில் இருந்தால் மாலை நேரத்தில் என்ன ஸ்நாக்ஸ் செய்து தரலாம் என்று யோசித்தாலே தலை வெடிக்கும். வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் பிடித்த மாதிரி ஒரு அப்பம் ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். டீ போடும் நேரத்தில் வெறும் பத்தே நிமிடத்தில் இந்த அப்பத்தை நாம் தயார் செய்துவிடலாம். அதுவும் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்தே. சரி, அந்த சூப்பர் சுவையான அப்பம் ரெசிபியை தெரிந்து கொள்வோமா.

unniyappam recipe

முதலில் ஒரு அகலமான பவுல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பச்சரிசி மாவு – 1 கப், கோதுமை மாவு – 1/2 கப், சீரகம் – 1/2 ஸ்பூன் நுனுக்கியது, சில்லி பிளக்ஸ் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மீடியம் சைஸ் – 1,  இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழை, இந்த எல்லா பொருட்களையும் முதலில் நன்றாக தண்ணீர் ஊற்றாமல் கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு, எந்த கப்பில் அரிசி மாவை அளந்து எடுத்தீர்களோ அதே கப்பில் 1 1/2 கப் அளவு தண்ணீரை எடுத்து இந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்து மாவை கரைத்து கொண்டால், சரியாக இருக்கும். இந்த மாவு தோசை மாவு பதத்திற்கு வரவேண்டும். ரொம்பவும் தண்ணீராக கரைத்து விட வேண்டாம். (1 கப் அரிசி மாவை அளந்து எடுத்து இருப்பீர்கள் அல்லவா, அதே கப்பில் 1 1/2 கப் அளவு தண்ணீர். நினைவு வைத்துக் கொள்ளுங்கள். அரிசி மாவு அளந்த கப்பலையே கோதுமை மாவையும் அளந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)

appam1

இறுதியாக கரைத்த மாவில் 1/2 ஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு 5 நிமிடம் வரை ஊற வைத்தால் போதும். ஒரு அகலமான பேனில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு கரைத்து வைத்திருக்கும் மாவை குழி கரண்டியில் எடுத்து பேனில் உள்ள எண்ணெயில் ஊற்றினால் அப்பம் போல வட்டம் வட்டமாக வரும்.

- Advertisement -

மிதமான தீயில் இது ஒரு பக்கம் சிவந்தவுடன் மீண்டும் மறுபக்கம் திருப்பி போட்டு சிவக்க வைத்து எடுங்கள். மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே சாஃடாகவும் சூப்பராக இருக்கும்.

appam

டீ போடுற நேரத்துல ஸ்நாக்ஸ் ரெசிபி தயாராகியிருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு படித்திருந்தால் நாளைக்கு ஈவினிங் நீங்க டீ போடும் போது இந்த ஸ்னாக் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -