அமாவாசையும், சூரிய கிரகணமும் சேர்ந்து வரும் ஏப்ரல் 20 அன்று இதை எல்லாம் செய்தால் 3 மகா தோஷங்கள் தீரும்

Chithirai amavasai
- Advertisement -

முன்னோர்களின் வழிபாட்டுக்குரிய சிறப்பு நாளாக அமாவாசை திதி விளங்குகிறது. பொதுவாக அனைத்து மாதங்களில் இந்த அமாவாசை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வருகின்ற இந்த அமாவாசையானது வைஷாக அமாவாசை என அழைக்கப்படுகிறது. புதிதாக பிறந்திருக்கின்ற சோபகிருது ஆண்டின் முதல் அமாவாசை திதி ஏப்ரல் 19ஆம் தேதி காலை 11:23 மணிக்கு துவங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி காலை ஒன்பது 9.41 மணி வரை நீடிக்கிறது. மேலும் ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமும் நடை பெற உள்ளது. இப்படி பல்வேறு சிறப்புகளுடன் கூடிய இந்த வைஷாக அமாவாசை தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வைஷாக அமாவாசை
இந்த வைஷாக அமாவாசை என்பது ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி நிகழவிருக்கின்றது. அதே தினம் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் காலை 7.04 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 மணி வரை நீடிக்கின்றது. எனவே அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து முடித்துவிட்டு காலை 7:00 மணிக்கு முன்பாகவே தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட வேண்டும். சூரிய கிரகணம் முடிந்த பிறகு வீட்டை தண்ணீர் ஊற்றி, நன்கு கழுவி சுத்தம் செய்து, குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் குளித்து முடித்த பிறகு, சூரிய கிரகண தோஷங்களை போக்கிக் கொள்ளக்கூடிய பரிகாரங்களை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

சர்வார்த்த சித்தி யோகம்
வருகின்ற ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி நிகழவிருக்கின்ற வைஷாக அமாவாசை தினத்தன்று அதிகாலை 5. 51 நிமிடத்திற்கு “சர்வார்த்த சித்தி யோக நேரம்” தொடங்குகிறது. எனவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய நினைக்கின்ற நற்காரியங்களை இந்த நேரத்தில் செய்வதால் அவை நிச்சயமான பலனை உங்களுக்கு பெற்றுத்தரும் என அனுபவம் வாய்ந்த ஜோதிட சாஸ்திர வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

விசேஷமான இந்த வைஷாக அமாவாசை தினத்தில் ஜாதகத்தில் கூறப்படுகின்ற மூன்று விதமான தோஷங்களை போக்குவதற்கான பரிகாரங்களை செய்தால் சிறப்பான பலன்களை பெறலாம் என அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். சனி தோஷம், பித்ரு தோஷம், கால சர்ப்ப தோஷம் என்கிற மூன்று தோஷங்களை தான் அவை.

- Advertisement -

சனி தோஷம்
நவகிரகங்களில் சனி பகவான் சூரிய பகவானின் மகனாக கருதப்படுகிறார். எனவே சூரிய பகவானுக்குரிய சித்திரை மாதத்தில் வருகின்ற வைஷாக அமாவாசை தினத்தன்று தென்பாரத பகுதியில் கோயில்களில் சனிபகவான் ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம சனி, அஷ்டம சனி, பாத சனி, விரைய சனி, போன்ற எந்த வகையான சனி கிரக தோஷம் இருந்தாலும் வரவிருக்கின்ற வைஷாக அமாவாசை தினத்தன்று அதிகாலை அல்லது மாலை வேளையில் சனிபகவான் சன்னதிக்குச் சென்று, சனி பகவானுக்கு எள் கலந்த நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் சனி கிரக தோஷம் நீங்கும்.

பித்ரு தோஷம்
ஒருவரது பரம்பரையில் மறைந்த முன்னோர்களுக்கு சரிவர திதி கொடுக்காததால் ஏற்படுவதே பித்ரு தோஷம். இந்த பித்ரு தோஷம் ஏற்பட்டால் அந்த குடும்பத்தில் சுபிட்சம் என்பதே ஏற்படாமல் போய்விடும். இதை போக்குவதற்கு வருகின்ற வைஷாக அமாவாசை தினத்தன்று அதிகாலையில் நதிக்கரை அல்லது கடற்கரையில் தலை மூழ்கி குளித்து முடித்துவிட்டு, மறைந்த முன்னோர்களுக்கு திதி அளித்த பிறகு, ஏழை எளிய மக்களுக்கு உங்களால்இயன்ற தான தர்மங்களை செய்வதால் முன்னோர்களின் ஆசி கிடைத்து உங்களின் பித்ரு தோஷங்கள் நீங்கி வாழ்வில் சுபிட்சங்கள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: புதன் பகவானால் புதாதித்ய யோகம் பெற்று வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல போகும் 4 ராசிக்காரர்கள்.

காலசர்ப்ப தோஷம்
ஜாதகங்களில் ஏற்படக்கூடிய மிகக் கடுமையான தோஷங்களில் ஒன்றாக இந்த கால சர்ப்ப தோஷம் கருதப்படுகிறது. இந்த கால சர்ப்ப தோஷம் ஏற்பட்ட நபருக்கு திருமணம் எளிதில் கை கூடாது. வேலைவாய்ப்பின்மை, உடல் நல கோளாறுகள் போன்ற பலவிதமான பிரச்சனைகளை இந்த தோஷம் ஏற்படுத்தும். இத்தகைய கடுமையான கால சர்ப்ப தோஷம் நீங்க வைஷாக அமாவாசை தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து, விட்ட பிறகு தங்கத்தால் செய்யப்பட்டிருக்கின்ற நாகராஜர் இருக்கின்ற கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானை தொடர்ந்து வழிபாடு செய்வதால் இந்த கால சர்ப்ப தோஷம் நீங்கி வாழ்க்கை சிறக்கும்.

- Advertisement -