சுட சுட சாதத்துடன் இந்த கீரை குழம்பை ஊற்றி அதனுடன் தொட்டுக்கொள்ள கருணைக்கிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள் அடடா! நாவில் எச்சில் ஊறும் சுவையில் அட்டகாசமாக இருக்கும்

keerai
- Advertisement -

விதவிதமாக நம் விருப்பப்படி கடைகளில் விற்கும் உணவுகளை சாப்பிட்டாலும் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளையும் வாரத்தில் இரண்டு முறையாவது வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தவறாமல் தனது உணவில் சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான உணவுப் பொருள் கீரை வகைகள். இந்த கீரை வகைகளை தவறாமல் நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கிறது. இரத்தத்தின் அளவை கூட்டுகிறது. இப்போது இருக்கின்ற பெண்களுக்கெல்லாம் திருமணத்திற்குப் பிறகு கருவுறும் காலத்தில் அவர்களின் இரத்தத்தின் அளவில் குறைபாடு ஏற்படுகிறது. இவ்வாறான பிரச்சனைகளை எதிர் கொள்ளாமல் இருக்க இப்போதிலிருந்தே கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு இப்படி மிகவும் சுவையான முறையில் கீரைக் குழம்பை செய்து அதனுடன் தொட்டுக்கொள்ள இந்த கருணை கிழங்கு வருவலையும் செய்திடுங்கள்.

dosai-pizza1

கீரை குழம்பு செய்முறை விளக்கம்:
ஒரு கட்டு அரைக்கீரையை இலைகளை இளம் தண்டுகளையும் தனியாக கில்லி தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை அலசி வைக்க வேண்டும் பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவை அனைத்தையும் ஒரு குக்கரில் சேர்த்து, இதனுடன் 7 பச்சை மிளகாய், அரை ஸ்பூன் உப்பு, எலுமிச்சை பழ அளவு புளி இவற்றுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். குக்கர் 4 விசில் வரும் வரை வேக விட்டு, பின்னர் குக்கரை திறந்து கீரையை கீரை சட்டியில் சேர்த்து மத்து வைத்துக் கடைய வேண்டும். அதன் பின்பு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து, மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் மூன்று பல் பூண்டை தட்டி சேர்த்து தாளித்து, கீரையில் சேர்க்க வேண்டும், அவ்வளவுதான் கீரை குழம்பு தயாராகிவிடும்.

arai-keerai1

கருணைக்கிழங்கு வறுவல்:
முதலில் கால் கிலோ கருணைக் கிழங்கை தோல் சீவி, முக்கோண வடிவங்களாக அறிந்துகொண்டு, தண்ணீரில் அலசி, ஒரு பாத்திரத்தில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் அரை ஸ்பூன் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவேண்டும். பின்னர் நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வேக வைத்த கருணைக்கிழங்கை எடுத்து அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் பின்னர் அடுப்பின் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து, மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிரட்டி வைத்துள்ள கருணைக்கிழங்கு துண்டை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.

karunai

பிறகு சுட சுட சாதத்துடன் செய்த அரைக்கீரை குழம்பு மற்றும் கருணைக்கிழங்கை சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். ஒரு வாய் வைத்தவுடனே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு இவை இரண்டும் சேர்ந்த காமினேஷன் மிகவும் அசத்தலாக இருக்கும்.

- Advertisement -