ரோஜா மற்றும் மல்லி செடி போன்ற மலர் செடிகளில் நிறைய பூக்கள் பெரிது பெரிதாக அடர்த்தியான நிறத்தில் பூக்க சமையலறையில் தூக்கி எறியப்படும் இந்த பொருட்கள் போதுமே!

malli-rose-chedi-coconut
- Advertisement -

வீட்டில் ரோஜா மற்றும் மல்லி செடிகள் வளர்ப்பவர்கள் மற்றும் இது போன்ற பல்வேறு பூச்செடிகளை விரும்பி வளர்ப்பவர்கள் பலரும் இதற்கு எளிமையான பராமரிப்பு கொடுக்க மறந்து விடுகின்றனர். பார்த்து பார்த்து வளர்க்கும் செடிகளில் கூட இவ்வளவு அழகாக ஒவ்வொரு கிளையிலும் கொத்து கொத்தாக பூக்கள் பூப்பது கிடையாது. ஆனால் எளிமையான முறையில் வீட்டு உரத்தை கொடுத்து அற்புதமான முறையில் கொத்துக்கொத்தாக நிறைய பெரிய பூக்களை அள்ள நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத்தான் இந்த தோட்டக்குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரோஜா செடி மற்றும் மல்லி செடிகள் மட்டும் அல்லாமல் எல்லா வகையான பூச்செடிகளிலும் ஒரு வகையான சிலந்தி வலை போல இருக்கக்கூடிய பூச்சி தொல்லை இருந்தால் இதுபோல செய்யலாம். பூச்சி தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்கு வேப்ப எண்ணெய் ஸ்பிரே ஆக பயன்படுத்துவது நல்லது. மேலும் வேர் பகுதிகளில் இருக்கக்கூடிய மண்ணைத் தோண்டி அதில் சிறிதளவு வேண்டாம் என்று தூக்கி எறியக்கூடிய கருவேப்பிலை இலைகளை போட்டு மூடி வையுங்கள்.

- Advertisement -

பிறகு சாதாரணமாக தண்ணீர் ஊற்றுங்கள். இது போல செய்வதால் சிலந்தி வலை போன்ற பூச்சிகள் தொந்தரவு மறையும். மல்லி செடிகளில் பெரிது பெரிதாக மொட்டுக்கள் விட, நிறைய பூக்களை மகசூல் செய்ய வீட்டில் வேண்டாம் என்று தூக்கி எரியக்கூடிய இந்த ரெண்டு பொருளை தண்ணீரில் ஊற வைத்தால் போதும். ஒன்று வாழைப்பழ தோல், இதில் ஏராளமான பொட்டாசியம் நிறைந்துள்ளது. இன்னொன்று வெங்காயத்தோல் இவை இரண்டையும் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாள் முழுவதும் ஊறிய தண்ணீரில் கால் கப் அளவிற்கு மட்டும் எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை நீங்கள் ஒரு செடிக்கு கொடுக்க வேண்டும். இது போல எத்தனை செடி இருக்கிறதோ, அத்தனை செடிக்கும் நீங்கள் இந்த தண்ணீரை ஊற்றி வந்தால் மல்லி பூக்களை நன்கு செழிப்பாக வளர செய்து அறுவடை செய்யலாம்.

- Advertisement -

அதே போல ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க நிறைய சத்துக்களை கொண்டுள்ள இந்த வேண்டாம் என்று தூக்கி எறியக்கூடிய பொருள் போதும். நாம் சமையலறையில் தினமும் சமையல் செய்யும் பொருட்களில் ஏராளமான சத்துக்களை வீணடிக்கிறோம். இந்த சத்துக்களை நம் வீட்டு தோட்டத்திற்கு கொடுத்தால் போதும் தோட்டத்தில் வளரக்கூடிய அத்தனை செடிகளும் செழிப்பாக வளரும். அந்த வகையில் தேங்காய் பால் எடுக்கும் பொழுது கிடைக்கக்கூடிய சக்கை தேங்காயை நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
உங்க மல்லி செடியில் ஒரு பூ கூட பூக்களையேன்னு கவலையாக இருக்கா? அப்படின்னா இந்த அஞ்சு டிப்ஸ் மட்டும் கரைட்டா பாலோ பண்ணுங்க. ஒவ்வொரு கிளையிலும் கிலோ கணக்கில் பூ பூக்கும்.

பின்பு இந்த தேங்காயை மூணு இன்ச் ஆழத்திற்கு மண்ணை தோண்டி ரோஜா செடியில் ஓரமாக போட்டு வைக்க வேண்டும். பின்னர் மண்ணை மூடிவிட்டு தண்ணீர் ஊற்றி விடுங்கள். இது போல செய்யும் பொழுது ரோஜா செடியில் பெரிது பெரிதாக நல்ல அடர்த்தியான நிறத்துடன் பூக்கள் அதிகமாக பூக்க துவங்கும். மேலும் மஞ்சள் நிற இலைகளை வெட்டி விட்டால், மீண்டும் அது பசுமையாக வளரும். ஆழமாக தோண்டி போடுவதால் எறும்பும் வராது கவலைப்பட வேண்டாம்.

- Advertisement -