விரும்பியது உடனே கிடைக்க, நினைத்தது விரைவில் நடக்க பிள்ளையாரின் அரச இலையை இப்படி செய்து பாருங்கள்.

arasa-ilai-pillaiyar

எல்லாருக்கும் மனதில் எண்ணற்ற கனவுகள், ஆசைகள் இருக்கும். நினைத்தது நடந்தால் கடவுள் இருக்கார்னு சொல்லுவோம். நடக்கலைன்னா, கடவுள் இல்லைன்னு சொல்லி வருத்தப்படுவோம். நீங்க நினைத்தது விரைவில் நடக்கவும், விரும்பியதை உடனே அடையவும் பிள்ளையார் எப்போதும் கண் கண்ட கடவுளாக துணை இருப்பார். அனைத்து தெய்வங்களுக்கும் முன்னால் இருப்பது முழுமுதற்க் கடவுளான பிள்ளையார். பிள்ளையாருக்கு உகந்த மரமாக அரச மரம் பார்க்கப்படுகிறது. தெய்வீக மரமாக விளங்கும் அரச மரத்தின் இலைக்கு நமது வேண்டுதல்களை உள் வாங்கும் சக்தி உண்டு. இந்த சக்தி வில்வ இலைக்கும் உண்டு.

arasa-ilai

அரச இலையின் உருவம் சாட்சாத் பிள்ளையாரின் உருவத்தை ஒத்ததாக இருக்கும். நீங்கள் கவனித்து பார்த்தால் நன்றாக தெரியும். இந்த இலைகளை 5 என்ற எண்ணிக்கையில் பறித்து கொண்டு வாருங்கள். நம் நாட்டில் அரச மரம் இல்லாத பகுதியே இருக்க முடியாது. ஆண்டியையும் அரசனாக்கும் திறன் அரச இலைக்கு உண்டு என்று கூறினால் நம்புவீர்களா? ஆனால் அது முற்றிலும் உண்மை. இத்தகைய சக்தி வாய்ந்த அரச இலையை மஞ்சள் கலந்த நீரினால் கழுவி சுத்தம் செய்த பின் ஒன்றன் மேல் ஒன்றாக ஐந்தையும் அடுக்கிக் கொள்ளுங்கள்.

அதன் மேல் அருகம் புல்லை சிறிது வைக்கவும். பின்னர் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து கொள்ளுங்கள். சிறந்த கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சள் கிழங்கு துஷ்ட சக்திகளை அழிக்கும் ஆற்றலும் படைத்துள்ளது. அத்தகைய மஞ்சளை நுனி உடையாமல் நாணயத்தின் மேல் வைக்கவும். அப்படியே மஞ்சளில் நனைத்த நூலைக் கொண்டு நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இந்த முடிப்பை வெள்ளிக்கிழமை தோறும் தயார் செய்து கொள்ளுங்கள். பூஜையின் போது கலச சொம்பு அல்லது உங்களிடம் இருக்கும் செம்பு, பித்தளை, மண் போன்றவற்றால் செய்த, நீங்கள் பயன்படுத்தாத ஏதாவது ஒரு சொம்பில் பாதியளவு பச்சரிசி நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் பச்சரிசியின் மேல் இந்த முடிப்பை வைத்து பூஜை அறையில் வைக்கவும். கலசத்திற்கு பூ சாற்றி, மஞ்சள், குங்குமம் இடவும்.

neideepam

நீங்கள் வெள்ளிக்கிழமை வழக்கமாக செய்யும் பூஜைகளை செய்யும் பொழுது இந்த கலசத்தை வைத்து, பிள்ளையாரின் பின்புறமாக நெய் தீபம் ஏற்றுங்கள். பின்புறம் தீபம் ஏற்றுவதால் கிரக தோஷங்கள் நீங்கும். அதில் வெள்ளெருக்கு திரி போடுவது கூடுதல் சிறப்பாக இருக்கும். உங்களின் மனக்குறைகளை பிள்ளையாரிடம் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, இப்படி செய்தால் பிள்ளையார் உங்களின் குறைகளை நிச்சயம் தீர்த்து வைப்பார். சிலருக்கு வருமானம் வருவதில் பிரச்சினை இருக்கும். பலருக்கு தொழில், வியாபாரம் போன்றவற்றில் பிரச்சினை இருக்கும்.

- Advertisement -

பெண்களுக்கு குடும்பத்தில் பிரச்சனை இருக்கும். மனதில் நிறைவில்லாத ஒரு உணர்வு இருக்கும். ஏதோ ஒன்று குறை இருப்பது போன்ற எண்ணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவாக தீர்வு காண முடியும். விநாயகர் மந்திரம், விநாயகர் போற்றி, விநாயகர் அகவல் என்று உங்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒரு விநாயகர் மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது மனதில் நிம்மதி உண்டாவதை நீங்களே கண்கூடாக உணர முடியும்.

arasa-mara-pillaiyar

இந்த கலசத்தை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று புதிதாக மாற்றி விடவேண்டும். அதில் வைத்திருந்த மஞ்சள், மற்றும் பச்சரிசியை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அரச இலை உங்கள் வீட்டு செடிகளில் போட்டுவிடலாம். ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் முடிந்து கொள்ளுங்கள். இதுபோன்று 9 வாரம் செய்து வர வேண்டும். 9 நாணயங்கள் சேகரித்த பின், அந்த நாணயங்களை அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று காணிக்கையாக உண்டியலில் செலுத்தி விடவும். இந்த பரிகாரத்தை செய்து முடிப்பதற்குள் நீங்கள் மனதில் நினைத்த விஷயங்கள், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நடந்துவிடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. முழு நம்பிக்கையுடன் சங்கடம் தீர்க்கும் பிள்ளையாரை வணங்கி பலனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
வாழ்க்கையில் ஒரே ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று, 17 தீபம் ஏற்றினால் போதும். உங்களால் நம்பவே முடியாத அதிசயங்கள் நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Arasa ilai vinayagar pariharam. Arasa ilai pillaiyar. Arasamaram benefits. Pillaiyar valipadu. Pillaiyar valipadu in Tamil.