கேட்கும் வரத்தை கொடுக்கும் 5 அரச இலைகள்.

vinayagar-arasa-ilai

இன்றைய சூழ்நிலையில், எல்லோருடைய வீட்டிலேயும் பொருளாதார பிரச்சனை இருந்துதான் வருகிறது. ஊரடங்கு உத்தரவும் இதற்கு ஒரு காரணம். வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனைக்கு எந்த வகையிலாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக் கொண்டு, குறிப்பாக விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் ஒரு நல்ல பலனை நம்மால் பெற முடியும்.

vinayagar

தொழில் பிரச்சனையாக இருந்தாலும் சரி, பண பிரச்சினையாக இருந்தாலும் சரி, ஆரோக்கிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, விநாயகரை மனதார வேண்டிக்கொண்டு இந்த அரச இலைகளுடன் என்ன பொருளைச் சேர்த்து, பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்மால் விரைவாக நல்ல பலனை பெற முடியும் என்பதைப் பற்றியும், பரிகாரத்தை வீட்டிலிருந்தே எப்படி செய்யலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு முக்கியமாக தேவைப்படும் பொருள். ஐந்து அரச இலைகள், இதை மட்டும் எப்படியாவது மரத்திலிருந்து பறித்து வந்து வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த அரச இலைகளுக்கு விநாயகரின் உருவம் இருக்கிறது. உற்று நோக்கிப் பாருங்கள் உங்களுக்கே தெரியும். அரச மரத்தடி பிள்ளையாருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே அளவுக்கு சக்தி, இந்த அரச இலைகளுக்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை.

arasa-ilai

வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் உருவத்தை பெற்றிருக்கும் இந்த அரச இலைகளை, மஞ்சள் தண்ணீரில் கழுவி லேசாக உளர்த்தி விட்டு, ஐந்து அரச இலைகளையும் ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து அடுக்கிக் கொண்டு, அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, ஒரு கிழங்கு மஞ்சளையும் வைத்து, நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை சொம்பு இருந்தாலும் சரி, செப்பு சொம்பாக இருந்தாலும் சரி, மண்பானையாக இருந்தாலும் சரி, இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பச்சை அரிசியை நிரப்பி, அதன் மேல் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அரசியலை முடிச்சை வைத்து விடுங்கள்.

- Advertisement -

உங்கள் பூஜை அறையில் வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் தயார் செய்து வைத்துள்ள சொம்பை வைத்து, விநாயகப் பெருமானை மனதார நினைத்து உங்களுக்கு தெரிந்த விநாயகப்பெருமானின் மந்திரத்தை உச்சரித்து, வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள். அடுத்த வெள்ளிக்கிழமை அன்று இந்த பொருட்களை எல்லாம் புதியதாக மாற்றிக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, உங்களால் எப்போது முடிகிறதோ அப்போது விநாயகர் கோவில் உண்டியலில் கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும்.

vinayagar

பச்சரிசியை சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மஞ்சளை முகத்தில் பூசி தேய்த்து குளித்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 வாரங்கள் செய்யும்பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைப்பதை கண்கூடாக பார்க்க முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்பிக்கையுள்ளவர்கள் செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் மணிபிளான்ட் செடி இருக்கா? இந்த புதன்கிழமை இதை மட்டும் செஞ்சுதான் பாருங்களேன்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Arasa ilai benefits in Tamil. Arasa ilai pariharam. Arasamaram benefits. Arasamaram vinayagar. Arasa ilai pillaiyar. Arasa ilai vinayagar.