பொடுகு, அரிப்பு, கொப்பளம், பேன், இப்படி பல வகையான பிரச்சனைகளுக்கும் இயற்கையான முறையில் தீர்வு காண இதோ ஒரு சூப்பரான ஐடியா.

hair5
- Advertisement -

தலைமுடி இல்லாதவர்களுக்கு, தலையில் அடர்த்தியாக முடி இல்லையே என்ற கவலை. தலைமுடி நிறைய இருப்பவர்களுக்கு அதை பக்குவமாக பராமரிப்பதில் பிரச்சனை. பொடுகு தொல்லை, அரிப்பு தொல்லை, பேன் தொல்லை இப்படி பலவிதமான தொல்லைகளில் இருந்து தலையையும் தலைமுடியையும் காப்பாற்றுவது பெரும்பாடு. உங்களுடைய அடர்த்தியான முடியில் அதிகப்படியான பிரச்சனைகள் உள்ளதா. பேன் பொடுகு அரிப்பு கொப்பளம் இன்னும் சொல்ல முடியாத பிரச்சனைகளை கூட சரி செய்யக்கூடிய ஒரு அருமையான அழகு குறிப்பு இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

பேன் பொடுகு தொல்லை நீங்க:
இதற்கு நமக்கு இயற்கையான சில பொருட்கள் தேவை. பொடுதலை கீரை 1 கைப்பிடி, செம்பருத்தி பூ 5, குப்பைமேனி இலை 1 கைப்பிடி, கருவாப்பிலை 1 கைப்பிடி, வெள்ளை கரிசலாங்கண்ணி 1 கைப்பிடி, மருதாணி இலை 1 கைப்பிடி, இந்த இலைகளை எல்லாம் சேகரித்து தண்ணீரில் போட்டு நன்றாக அலசி விடுங்கள். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை ஒரு ஸ்டீல் பில்டரில் ஊற்றி வடிகட்டி கொண்டால் இதனுடைய சாறு மட்டும் தனியாக நமக்கு கிடைத்து விடும்.

- Advertisement -

இது ஒரு மூலிகை பொருட்கள் சேர்ந்த கலவை தண்ணீர். இதற்கு அற்புதமான சக்தி உள்ளது. தலைமுடி பிரச்சனைகளுக்கு சீக்கிரம் தீர்வு தரும். தலைக்கு தேய்த்து குளிக்க, சீயக்காய் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிலேயே அரைத்த சீயக்காயாக இருக்கட்டும். கடையில் வாங்கிய சீயக்காயாக இருக்கட்டும். அதில் இந்த பச்சை நிற சாரை ஊற்றி கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு இந்த சீயக்காயை தலையில் போட்டு தேய்த்து ஐந்து நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் உங்களுடைய தலைமுடியில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இந்த குறிப்பை பின்பற்றலாம். தலையில் இருக்கும் பிரச்சனை படிப்படியாக குறைவதை உணருவீர்கள். தலையில் பொடுகு பேன் அரிப்பு தொல்லை எல்லாம் நின்று விட்டால் இந்த குறிப்பை நீங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது.

- Advertisement -

அதேபோல சீயக்காயை போட்டு தலைக்கு குளித்துவிட்டு தலையில் இருக்கும் சீயக்காயை சுத்தமாக அலசி விட வேண்டும். சீயக்காய் துகள்கள் தலையில் ஒட்டி இருந்தாலும் அதன் மூலம் தலையில் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வெளியில் சென்று வந்தால், அதாவது, அதிகமாக நீங்கள் பேருந்தில், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களாக இருந்தால் உங்களுடைய தலையை வாரத்தில் மூன்று நாள் கட்டாயம் அழுக்கு போக அலசி விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: 20 நாட்களில் அந்த காலத்து பாட்டி சொன்ன இந்த எண்ணெயை தடவி பாருங்க இயற்கையாகவே உங்க முடி காடு போல அடர்த்தியாக வளருமே!

அழுக்கும் வியர்வையும் சேரும்போது பொடுகு கொப்பளம் infection பேன் தொல்லை நிச்சயம் வரத்தான் செய்யும். பக்க விளைவுகள் இல்லாமல் தலைமுடியை பாதுகாக்க சொல்லப்பட்டிருக்கும் இந்த அழகு குறிப்பு படித்தவர்கள் பின்பற்றி பலன் பெரலாம்.

- Advertisement -