20 நாட்களில் அந்த காலத்து பாட்டி சொன்ன இந்த எண்ணெயை தடவி பாருங்க இயற்கையாகவே உங்க முடி காடு போல அடர்த்தியாக வளருமே!

hair-fall-oil
- Advertisement -

அந்த காலத்தில் தாய்மார்கள் எல்லாம் அவர்களுடைய பாட்டி சொன்ன இயற்கை மூலிகைகள் கொண்ட எளிமையான தேங்காய் எண்ணெயை தான் தலைக்கு தேய்க்க பயன்படுத்தினர். மேலும் செயற்கை ரசாயனங்கள் கலக்கப்பட்ட எந்த விதமான ஷாம்பூக்களையும் அவர்கள் பயன்படுத்தியது இல்லை. இயற்கையான சீயக்காய் கொண்டு தேய்த்து முடியை பராமரித்ததால் காடு போல அடர்த்தியாகவும், நீளமாகவும் அவர்களுடைய தலைமுடி கரு கருவென்று அழகாக இருந்து வந்தது.

பெண் பார்க்க செல்லும் பொழுது ஒரு பெண்ணுக்கு எந்த அளவிற்கு முடி நீளமாக இருக்கிறது? என்பதை கவனித்ததெல்லாம் உண்டு. நீளமான கூந்தல் உடைய பெண்கள் குடும்பத்திற்கு உகந்தவளாக இருப்பாள் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இன்று யாருக்கும் அந்த அளவிற்கு நீளமான கூந்தல் என்பது இல்லை சரி, நீளம் இல்லை என்றாலும் பரவாயில்லை அடர்த்தியாவது இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. எலிவால் போல இருக்கும் இந்த கூந்தலை இழந்தது இழந்தாயிற்று என்று விட்டு விடாமல் மீண்டும் காடு போல அடர்த்தியாக வளர செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

முதலில் அரை லிட்டர் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். எல்லா ஆர்கானிக் மற்றும் எண்ணெய் விற்பனையாகங்களில் கிடைக்கப் பெறுகிறது. இதனுடன் எளிதாக வீட்டிலேயே கிடைக்கக்கூடிய இந்த மூலிகைகளை சேர்த்து காய்ச்ச வேண்டும். ஒரு பெரிய கற்றாழை மடல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மேல் தோலை சீவி விட்டு ஐந்தாறு முறை நன்கு அலசி ஈரப்பதம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஐந்து இதழ் கொண்ட செம்பருத்தி பூக்கள் 10 எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு கரிசலாங்கண்ணி இலைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். கரிசலாங்கண்ணி இலை இல்லை என்றால் அதற்கு பதிலாக நீங்கள் ஐந்து நெல்லிக்கனிகளை எடுத்துக் கொள்ளலாம். பெரிய நெல்லிக்காய்கள் எடுத்து அதில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டிலேயே சீயக்காயையும் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முறை அரைத்தால் ஆறு மாதம் வரை வைத்திருந்து தாராளமாக பயன்படுத்தலாம். உங்கள் தலைமுடி மற்றும் அழகிற்காக ஒரு நாள் இதற்கென மெனக்கெடலாம் சோம்பல் வேண்டாம். மேற்கூறிய எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து வாருங்கள். அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை அடி கனமான வாணலியில் ஊற்றி நன்கு காய விடுங்கள். காய்ந்ததும் நீங்கள் அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
கத்தை கத்தையா கட்டுக்கடங்காமல் முடி வளர கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்தினால் போதும். ஒரு நரை முடி கூட இல்லாமல் கருகரு கூந்தலை பெற அருமையான வழி.

எண்ணெய் கொதித்து அடங்கியதும் அடுப்பை அணைத்து அப்படியே குளிர வைத்து விடுங்கள். நன்கு குளிர்ந்து சூடெல்லாம் ஆறியதும் அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இவ்வளவுதான், இந்த தேங்காய் எண்ணெயை நீங்கள் வேர்க்கால்களில் படும்படி நன்கு பத்து நிமிடம் மசாஜ் செய்து தினமும் தடவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் சீயக்காய் போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். இது போல தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் 20 நாட்களிலேயே நீங்கள் இழந்த முடியை முளைக்க செய்து விடலாம். இதனால் இனிவரும் காலங்களில் உங்களுடைய முடியும் அடர்த்தியாக வளர துவங்கும்.

- Advertisement -