நாலு உருளைக்கிழங்கு இருந்தா நல்ல மொறு மொறுன்னு சூப்பரான இந்த ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி பண்ணிடலாம். இப்ப லீவுல இருக்க பசங்களுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்யறதுன்னு டென்ஷனே இல்லாமல் சட்டுனு செஞ்சிடலாம்.

bonda
- Advertisement -

இப்ப குழந்தைகளுக்கு எல்லாம் கோடை விடுமுறை விட்டு வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு சாப்பிட ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்ற யோசனை அனைத்து தாய்மார்களுக்குமே இருக்கும். உருளைக்கிழங்கை வைத்து இந்த ஒரு சிம்பிளான ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று நீங்கள் தெரிந்து கொண்டால் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இதை செய்து கொடுத்து சமாளித்து விடலாம். வாங்க அந்த ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு முதலில் ஒரு டம்ளர் அரிசியை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி இத்துடன் ஐந்து காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். இதற்கு எந்த அரிசியை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்ததாக நான்கு உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்த பிறகு தோல் உரித்து தனியாக எடுத்து வைத்து விடுங்கள்.

இரண்டு மணி நேரம் கழித்து ஊற வைத்து அரிசியை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்த பிறகு இரண்டையும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியான மாவு பதத்திற்கு அரைத்து அதை ஒரு பௌலில் ஊற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து அதே மிக்ஸி ஜாரில் வேக வைத்த உருளைக்கிழங்கை சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்து அதிலும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து ஏற்கனவே அரைத்து வைத்த அரிசி மாவில் இந்த உருளைக்கிழங்கு பேஸ்ட்டையும் சேர்த்து கலந்து விடுங்கள்.

இந்த மாவில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்த பின் ஒரு கொத்து கருவேப்பிலை ஒரு கைப்பிடி நிறைய கொத்தமல்லி இரண்டையும் நன்றாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம், கால் ஸ்பூன் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மாவு கையில் எடுத்து உருட்டி போண்டா போடும் பதத்திற்கு இருக்க வேண்டும் ஒரு வேலை தண்ணீர் அதிகமாகி விட்டது என்றால் பச்சரிசி மாவை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி சேர்ப்பதன் மூலமாக போண்டாவும் அதிக எண்ணெய் குடிக்காமல் போண்டாவும் நல்ல கிறிஸ்பியாக கிடைக்கும்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்து விடுங்கள். இப்போது தயார் செய்து வைத்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறு சிறு போண்டாக்களாக போட்டு இரண்டு நிமிடம் கழித்து இந்த போண்டாவை திருப்பிப் போட்டு பொன்னிறமாக சிவந்து வந்தவுடன் எடுத்து விடுங்கள். நல்ல சுவையான கிரிஸ்பியான ஈவினிங் ஸ்னாக்ஸ் தயார்.

இதையும் படிக்கலாமே: ரொம்பவே வித்தியாசமான இந்த சட்னி ரெசிபியை தெரிஞ்சி வைச்சிகிட்டா, அவசர நேரத்துக்கு சட்டுன்னு சூப்பரான ஒரு சட்னி ரெடி பண்ணிடலாம்? இதுக்கு அப்புறம் நேரமே இருந்தாலும் இந்த சட்னியை தான் அரைப்பீங்க.

இந்தக் கோடை கால விடுமுறையில் உங்க வீட்டு குட்டிஸை சமாளிக்க இது போல சிம்பிளான ஸ்நாக்ஸ் ரெசிபிகளை தெரிந்து வைத்துக் கொண்டால் சமாளித்து விடலாம். இந்த ரெசிபியை நீங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -