- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்தேங்காய் வச்சு செய்ற இந்த பூரியை நீங்க ட்ரை பண்ணி இருக்கீங்களா! இதை மட்டும் செய்து...

தேங்காய் வச்சு செய்ற இந்த பூரியை நீங்க ட்ரை பண்ணி இருக்கீங்களா! இதை மட்டும் செய்து உங்க பிள்ளைகளுக்கு குடுத்து பாருங்க, பசங்க சைலன்டா எல்லாத்தையும் காலி பண்ணிடுவாங்க. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூரி என்றால் சாப்பிட ஆசைப்படாதவர்களே இல்லை. பெரியவர்கள் கொஞ்சம் இந்த பூரி எண்ணெய் பொருள் என்று தயங்குவார்களே தவிர பூரியை பொருத்தவரையில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு தான். இந்த பூரியை எப்போதும் ஒரே மாதிரி கோதுமை மாவு, மைதா மாவு போன்றவற்றில் செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக அரிசி மாவில் தேங்காய் கலந்து செய்யும் பொழுது இதன் சுவை அருமையாக இருப்பதுடன் வித்தியாசமான ஒரு உணவை செய்தது போலவும் இருக்கும். மைதா மாவு போன்றவற்றில் செய்யும் பூரியை விட இந்த அரிசி தேங்காய் வைத்து செய்யும் உணவு ஆரோக்கியமானதும் கூடக். சரி அந்தப் பூரியை மிக மிக எளிமையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதற்கு முதலில் இரண்டு கப் அளவு அரிசி மாவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் எந்த கப்பில் அரிசி மாவு அளக்கிறீர்களோ அதே கப்பில் ஒரு கப் அளவிற்கு தேங்காய் சின்ன சின்னதாக அதன் தோலை நீக்கிவிட்டு செய்து கொள்ளுங்கள் அப்பொழுது தான் பூரி பார்க்க மிக அழகாக இருக்கும்.

- Advertisement -

அரிந்து வைத்த இந்த தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நல்ல பைனாக அரைக்க வேண்டும். ஏனென்றால் இதை நாம் வடிகட்டியோ பால் எடுத்துதோ செய்யப் போவதில்லை. அப்படியே மாவில் கலக்க போகிறோம் எனும் போது நாம் அரைக்கும் பதம் எத்தனை நைசாக இருந்தால் பிசைய நன்றாக இருக்க வேண்டும் என்று பார்த்து அந்த அளவிற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்தெடுத்த இந்த தேங்காயை அரிசி மாவில் கலந்து வைத்து கொள்ளுங்கள் இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு, ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தண்ணீரை கொதிக்க விடுங்கள் தண்ணீர் கொதித்ததும் இந்த அரிசி தேங்காய் கலந்து வைத்த பவுலில் ஊற்றி ஒரு கரண்டி வைத்து கலந்து அப்படியே வைத்து விடுங்கள். மாவு கொஞ்சம் சூடு ஆறி கை பொறுக்கும் பதம் வந்த பிறகு அந்த மாவை நல்ல சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி மேலே எண்ணெய் தடவி ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு பூரிகட்டையின் மேல் ஒரு கவர் அல்லது வாழை இலை போட்டுக் கொள்ளுங்கள். அதன் மேல் உருட்டி வைத்திருக்கும் உருண்டை ஒன்றை வைத்து அதற்கு மேல் இன்னொரு கவலையோ வாழை இலையோ வைத்து ஒரு சின்ன தட்டு வைத்து உருண்டையின் மேல் லேசாக அழுத்துங்கள் உங்களுக்கு அந்த மாவு நன்றாக விரிந்து கொடுத்து வட்டமாக வந்து விடும். அதன் பிறகு இது அரிசி மாவு என்பதால் ஓரங்களில் மட்டும் கொஞ்சம் வெடிப்பு இருப்பது போல் இருக்கும். நீங்கள் ஏதாவது ஒரு கிண்ணத்தை வைத்து அழகான வட்ட வடிவில் இந்த மாவை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பு நல்ல தீயில் இருக்கட்டும் திரட்டி வைத்து பூரியை அதில் போட்டவுடன் லேசாக மேலே எழும்பி வரும் போது கரண்டி வைத்து பூரி மேல் லேசாக அழுத்தி விடுங்கள். பூரி நன்றாக உப்பி வரும். அட்டகாசமான தேங்காய் பூரி ரெடி.

இதையும் படிக்கலாமே: டயட் என்றாலே கஷ்டப்பட்டு தான் இருக்கணுமா என்ன? ஏன் ஜாலியா இந்த லட்டு சாப்பிட்டு கூட டயட் இருக்கலாமே. அழகுடன் ஆரோக்கியத்தையும் சேர்த்த பராமரிக்க தினமும் இந்த ஒரு லட்டு போதும்.

இதனுடன் உங்களுக்கு விருப்பமான சைட் டிஷ் எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் பூரி மசாலா, பட்டர் மசாலா, டிபன் சாம்பார் கூட இந்த பூரிக்கு நன்றாக தான் இருக்கும் இது சாதரணமாக கோதுமை மைதாவில் இருப்பது போல் நேரமானால் சாப்பிட கடினமாக ஆகிவிடாது. நேரம் கழித்து சாப்பிட்டாலுமே கூட இந்த பூரி நன்றாகவே இருக்கும். நீங்களும் உங்க வீட்டில் இந்த பூரி ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்