ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபுள் சூப்! சுலபமாக செய்வது எப்படி?

- Advertisement -

நம்ம வீட்டுல இருக்கிறவங்க எல்லாருக்குமே வெஜிடபிள் சூப் என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஹோட்டலில் செய்யும் வெஜிடபிள் சூப்புக்கு சுவை அதிகம். நம்முடைய வீட்டில் சூப் வைத்தாலும், ஹோட்டலில் வைப்பது போல் அவ்வளவு சுவையாக இருப்பதில்லை என்று கட்டாயம் நம் குழந்தைகள் சொல்லுவார்கள். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் சூப் வைப்பது எப்படி? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்து, பசியைத் தூண்டும் சூப் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாமா?

veg-soup

Step 1:
முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட், இந்த காய்களை தேவையான அளவு மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். ஸ்வீட் கான் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும். உங்களுக்கு தேவைப்பட்டால் பச்சை பட்டாணி, காளான் போன்ற பொருட்களையும் இந்த சூப்பில் சேர்த்துக் கொள்ளலாம். முதலில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை குக்கரில் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு விசில் வைத்தால் போதும். காய்கறிகள் நன்றாக வெந்துவிடும்.

- Advertisement -

Step 2:
அடுத்ததாக கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி துருவிய இஞ்சி சேர்த்து, அடுத்ததாக பொடியாக வெட்டிய பூண்டு 2பல் (தோல் உரித்தது) சேர்த்து, நன்றாக வதக்கவும். அதன் பின்பு, ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து, 3 நிமிடம் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக சுருங்க வேண்டும். அதன் பின்பாக வேகவைத்து, தயாராக வைத்திருக்கும் காய்கறிகளை தண்ணீரோடு சேர்த்து விடுங்கள். சூப்பிற்கு தண்ணீர் அதிகமாக தேவைப்பட்டால் இந்த இடத்தில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

choped-veg

காய்கறி வேக வைக்கும்போது பாதி அளவு தான் உப்பு சேர்த்து இருப்போம். இந்த இடத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, இதில் சேர்த்திருக்கும் வெங்காயத்திற்கும், அதிகப்படியாக சேர்க்கும் தண்ணீருக்கும் கொஞ்சம் உப்பை போட்டுக்கொள்ள வேண்டும். நன்றாக கொதி வந்த பிறகு 1/4ஸ்பைன் கான்ஃபிளவர் மாவை, 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் கலந்து, சூப்பில் ஊற்றி, மூன்று நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைத்து விட்டு, மிளகுத்தூள் தூவி, கொத்தமல்லித்தழை தூவி, சூடாக பரிமாறினால் ஹோட்டல் ஸ்டைல் சூப் ரெடி.

- Advertisement -

தேவைப்பட்டால் கான் சிப்ஸ், வெங்காயத்தாழ் தூவி குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள்! மிகவும் விருப்பமாக குடிப்பார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பசியைத் தூண்டும் தன்மையும் இதற்கு உண்டு. எந்தவிதமான செயற்கை பொருட்களும் கலக்காத இந்த சூப்பை, வீட்டிலேயே தயாரித்து கொடுத்தால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா செய்வது எப்படி?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -