அட! இந்த தண்ணில இவ்வளவு விஷயம் செய்யலாமா? இது தெரியாம இத்தனை நாள் இதை வீணாக கீழே ஊத்திட்டமே அப்படின்னு பீல் பண்ற அளவுக்கு நிறைய டிப்ஸ் இருக்கு வாங்க பார்க்கலாம்.

rice soak water face vegitable
- Advertisement -

இன்றளவும் கிராமப்புறங்களில் அரிசி ஊற வைத்த தண்ணீரை பல வழிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் அரிசி ஊற வைத்த தண்ணீர் முதல் சாதம் கொதிக்கும் தண்ணீர், வடிக்கும் தண்ணீர், மீந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பது என இதில் எதையுமே வீணாக்காமல் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள். நாம் தான் இந்த அரிசி கழுவும் தண்ணீரில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியாமல் அதை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். இந்த வீட்டு குறிப்புகள் பதிவில் அரிசி கழுவும் தண்ணீரை வைத்து என்னென்ன பயன்பாட்டிற்கு உபயோகிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முதலில் இந்த தண்ணீரில் என்னென்ன பயன்கள் உண்டு என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் அதிகப்படியான அமினோ அமிலங்கள், விட்டமின் ஏ பி சி போன்ற சத்துக்கள், தாதுக்கள் என நம்முடைய உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது மருத்துவ ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த தண்ணீரை நாம் உடலுக்கு மட்டுமின்றி சமையல், அழகு குறிப்பு என அனைத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அரிசியை எப்போதும் சிறிது நேரம் ஊற வைத்து வடிப்பது நல்லது. அப்படி ஊற வைக்கும் போது அரிசி ஊறும் அந்த தண்ணீரில் நமக்கு நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உருவாவதாக சொல்லப்படுகிறது. அந்த தண்ணீரை நாம் பயன்படுத்தும் போது தான் நமக்கு இத்தகைய சத்துக்கள் கிடைக்கும். அரிசியை ஒரு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்த பிறகு சுத்தம் செய்யும் முதல் தண்ணீரை வைத்து முகம், முடி போன்றவற்றை பராமரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்தடுத்த முறை கழுவும் தண்ணீரை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

முதலில் சுத்தம் செய்யும் இந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கொஞ்சம் கடலை மாவு, ரோஸ் வாட்டர் மேலும் அரிசி கருவிய இந்த தண்ணீர் மூன்றையும் ஒன்றாக குழைத்து முகத்தில் பேக் போடும் போது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து முகம் பிரகாசமாக இருக்கும். அதே போல் இந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைத்து தலைமுடிக்கு அடிக்கடி ஸ்பிரே செய்யும்போது முடியில் வெடிப்பு வராமல் தடுப்பதோடு, இதை தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் பொடுகு, தலையில் அரிப்பு போன்றவை வராமல் தடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதே போல் கத்திரிக்காய், வாழக்காய் போன்ற காய்கறிகளை அரிந்து வைத்தால் கருத்து விடும். அது போன்ற சமயங்களில் அரிந்த காய்கறிகளை இந்த அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு வைக்கும் போது கருக்காமல் இருக்கும். கருணை கிழங்கு சமைக்கும் முன் இந்த தண்ணீரில் போட்டு எடுத்தால் அரிக்காது. ரசம் சாம்பார் குழம்பு வகைகள் வைக்கும் போது புளியை இந்த தண்ணீரில் ஊற வைத்து சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது குழம்பின் ருசியும் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் குழம்பும் கெட்டியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அது மட்டுமின்றி இந்த தண்ணீர் செடிகளுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து மிக்க உரமாக பயன்படுகிறது. வீட்டில் வைத்திருக்கும் செடிகளுக்கு தினமும் ஊற்றும் தண்ணீருக்கு பதிலாக இந்த தண்ணீரை ஊற்றினால் செடிகள் பல மடங்கு வேகமாகவும் செழிப்பாகவும் வளரும்.

இதையும் படிக்காலமே: இனி பூரி சுடும் போது இதில் போட்டு எடுத்த பிறகு சுட்டு பாருங்கள் கொஞ்சம் கூட எண்ணெய் நிறம் மாறாமல் அடியில் கசடு தங்கி வீணாக்காமல் எண்ணெய் அப்படியே இருக்கும்.

இது வரை நாம் இந்த தண்ணீரை பற்றி தெரியாமல் வீணாக்கி இருந்தாலும், இந்த பதிவின் மூலம் இதன் பயன்பாடுகளை தெரிந்து கொண்டு முடிந்த வரையில் இதை நம்முடைய ஆரோக்கியத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -