- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்10 நிமிடத்தில் பெட்டிக்கடை முள்ளு முறுக்கு தயார். வெறும் அரிசி மாவு மட்டுமே போதும். தீபாவளி...

10 நிமிடத்தில் பெட்டிக்கடை முள்ளு முறுக்கு தயார். வெறும் அரிசி மாவு மட்டுமே போதும். தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி.

- Advertisement -

பெரும்பாலும் முறுக்கு செய்வதாக இருந்தால் அரிசி மாவுடன், உளுந்து மாவு அல்லது பொட்டு கடலை மாவு சேர்த்து தான் செய்வோம். ஆனால், கொஞ்சம் வித்தியாசமான முறையில் வெறும் பச்சரிசி மாவை வைத்து முள்ளு முறுக்கு எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பெட்டிக்கடைகளில் இந்த முள்ளு முறுக்கு நமக்கு கிடைக்கும். அதன் சுவை மிக மிக அருமையாக இருக்கும். அதே போல, ஒரு டேஸ்ல தான் இன்னைக்கு நம்ம வீட்ல இந்த முறுக்கு ட்ரை பண்ணி பாக்க போறோம். இந்த தீபாவளிக்கு மிஸ் பண்ணாம உங்க வீட்லயும் செஞ்சு பாருங்க.

murukku2

உங்க வீட்ல எப்போதும் அரிசி அளப்பதற்கு எந்த கப்பை பயன்படுத்துகிறீர்களா, அதே கப்பை நீங்கள் இந்த முறுக்கு மாவு அளப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாப் பொருட்களையும் ஒரே கப்பில் தான் அளக்க வேண்டும் கவனமாக.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். 1 கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த தண்ணீரில் முறுக்குக்கு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் 1 ஸ்பூன், வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், சேர்த்து நன்றாக இந்த தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

murukku1

தண்ணீர் நன்றாக கொதித்து வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, தண்ணீரை எந்த கப்பில் அளந்தீர்களோ அதே கப்பில் 1 கப் பச்சரிசி மாவை சுடுதண்ணீரில் போட்டு நன்றாக கலந்து விடவேண்டும். அரிசிமாவு தண்ணீரை உறிஞ்சிக் கெட்டிப் பதத்துக்கு வந்தவுடன். அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு தட்டு போட்டு இந்த மாவை அப்படியே கடாயில் மூடி விடுங்கள். அந்த சூட்டிலேயே மாவு நன்றாக வெந்து வந்துவிடும்.

- Advertisement -

ஒரு நிமிடம் கழித்து கடாயில் இருக்கும் மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது அந்த மாவு சூடாக இருக்கும். அது கை பொறுக்கும் சூடு வரும்வரை ஆறட்டும். இந்த மாவு கொஞ்சம் கட்டியாக தான் நமக்கு கிடைத்திருக்கும். இந்த மாவோடு வாசனைக்காக சீரகம் 1 ஸ்பூன், எள்ளு 1 ஸ்பூன், சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து மாவை முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

murukku1

உங்க வீட்டில முறுக்கு குழளில் ஸ்டார் அச்சு இருக்கும். முறுக்கு குழாயில் எண்ணெய் தடவி, ஸ்டார் அச்சு போட்டு, தேவையான அளவு முறுக்கு மாவை அச்சில் நிரப்பி, ஒரு கவரில் எண்ணெய் தடவி அதன் மேலே முறுக்கை பிழிந்து, பிழிந்த முறுக்குகளை எண்ணெயில் பொரித்து எடுத்தால், சூப்பரான பெட்டிக்கடை முள்ளு முறுக்கு தயார்.

murukku3

அடுப்பை மிதமான தீயில் வைத்து முறுக்கை பொன் நிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு இந்த முறுக்கு மொறுமொறுவென வித்தியாசமான சுவையில் சூப்பராக இருக்கும். மிஸ் பண்ணாம இந்த தீபாவளிக்கு ட்ரை பண்ணி பாருங்க.

murukku4

பின்குறிப்பு: இந்த முறுக்கை வீட்டில் அரைத்த பச்சரிசி மாவில் செய்யலாம். கடையில் வாங்கிய முறுக்கு மாவு, இடியாப்பம் மாவு, பச்சரிசி மாவு, இதில் எந்த மாவில் வேண்டுமென்றாலும் முயற்சி செய்து பார்க்கலாம். ஒரே மாதிரியான சுவை தான் கிடைக்கும். தண்ணீர் சேர்த்து பிசையும் அளவுகள் தான் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாவு நிறைய தண்ணீரை உறிஞ்சும். சில மாவு குறைவாக தண்ணீர் உறிஞ்சும். மாவு பக்குவத்தை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்.

சற்று முன்