அரிசியில் இருக்கும் வண்டை விரட்ட ஐடியா

arisi
- Advertisement -

இட்லி அரிசி வாங்கி வைத்தாலும் சரி, சாப்பாட்டு அரிசி வாங்கி வைத்தாலும் சரி, பச்சரிசி வாங்கி வைத்தாலும் சரி, இந்த வண்டுகள் மோப்பம் பிடித்து எப்படியாவது அதில் வந்து தங்கி விடுகிறது. இந்த அரிசி எல்லாம் ரொம்ப பாவம் வண்டிகளிடம் சிக்கி தவிக்கிறது. வண்டுகள் வந்தால் அடுத்து புழு வரும். அவ்வளவுதான் அந்த அரிசி வீணாகும் அளவுக்கு போய்விடும்.

இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க எத்தனையோ வீட்டு குறிப்புகள் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் தாண்டி அரிசிக்குள் வண்டு வருகிறது எனும் போது இந்த குறிப்பையும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். வெறும் 2 பொருள்தான். நம் சமையல் அறைக்குள் இருக்கும் அந்த 2 பொருளை எடுத்து இந்த அரிசிக்குள் புதைத்து வைத்தால், அரிசியில் இருக்கும் வண்டிகள் தானாக வெளியே ஓடிவிடும்.

- Advertisement -

இந்த குறிப்பை பின்பற்றும் போது நீங்கள் வீட்டிற்குள் அரிசியை வைத்து செய்யாதீங்க. பிறகு வீடு முழுவதும் வண்டு பரவி விடும். வீட்டிற்கு வெளிப் பக்கமாக நிழல் பாங்கான இடத்தில் வைத்து இந்த குறிப்பை பின்பற்றுங்கள். அதேபோல சில பேர் அரிசியில் வண்டு வந்துவிட்டால், அதை கொண்டு போய் வெயிலில் காய வைப்பார்கள்.

அரிசியில் வண்டு வராமல் இருக்க

வெயிலில் காய வைத்தால் அரிசியில் இருக்கும் வண்டு புழு பூச்சிகள் போய்விடும். ஆனால் அந்த அரிசியை சமைக்கும் போது சீக்கிரம் குழைந்து போகும். அரிசி சீக்கிரம் உடைய ஆரம்பிக்கும். அதனால் அந்த தப்பை பண்ணாதீங்க. அரிசியை வெயிலில் காய வைக்காதீங்க. நிழலில் வைத்து இந்த குறிப்பை பின்பற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரிசியில் இருக்கும் வண்டுகள் தானாக ஓட்டம் எடுக்க அரசியல் வைக்க வேண்டிய 2 பொருள் என்ன தெரியுமா? கிராம்பு பூண்டு. இருங்க படிச்சிட்டு அப்படியே போயிடாதீங்க. இதை வைப்பதற்கு ஒரு சூட்சமம் இருக்கிறது. பூண்டை தோளோடு எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு பூண்டுக்கு நடுவே கத்தியை வைத்து லேசாக கீறுங்கள். அந்த கீரளுக்கு நடுவே 1 கிராம்பை சொருகுங்கள்.

இதே போல ஐந்து அல்லது ஆறு பூண்டுகளை தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு அரிசி புடைக்கும் முறத்தில் இரண்டு கிலோ அல்லது மூன்று கிலோ அரிசியை கொட்டி பரப்பி விடுங்கள். பரப்பிய அரிசிக்கு ஆங்காங்கே நடுநடுவே இந்த பூண்டை சொருகி வைத்து விடுங்கள். இந்த அரிசி கொட்டிய முறத்தை வீட்டிற்கு வெளி பக்கத்தில் வைத்து விடுங்கள். இரண்டே நிமிடம் பாருங்கள். அதில் இருக்கும் வண்டு புழு பூச்சிகள் எல்லாம் மிதந்து வெளியே ஓடி வந்து விடும்.

- Advertisement -

அரிசியல் சுத்தம் செய்து மீண்டும் நீங்கள் அதை அப்படியே கோணிப்பையிலோ அல்லது அரிசி கொட்டி வைக்கும் டப்பாவிலோ ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த கிராம்பு பூண்டை அந்த அரிசியில் போட்டு வைத்தால் மீண்டும் அதில் வண்டு பிடிக்காமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: தப்பு தப்பா சமையல் செஞ்சாலும் தப்பிக்க 10 சமையல் குறிப்புகள்

நீங்க எவ்வளவு அரிசி வைத்திருக்கிறீர்களோ அதற்கு தகுந்தது போல இந்த பூண்டில் கிராம்பை சொருகி தயார் செய்து கொள்ளுங்கள். எளிமையான வீட்டு குறிப்பு தான். உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டு அரிசி பாவம் அந்த புழு பூச்சி வண்டுகளிலிருந்து தப்பிக்கட்டும். அரிசிக்கு மட்டும் அல்ல பருப்பு தானிய வகைகளிலும் புழு பூச்சி வராமல் இருக்க இந்த குறிப்பை பின்பற்றலாம்.

- Advertisement -