தப்பு தப்பா சமையல் செஞ்சாலும் தப்பிக்க 10 சமையல் குறிப்புகள்

cooking1
- Advertisement -

இல்லத்தரசிகள் யாருமே தெரிந்து சமையலில் தவறு செய்வது கிடையாது. எதிர்பாராமல் செய்த தவறுகளை சரி செய்யவும், சமையலில் தெரியாத சில புத்தம் புது ஐடியாக்களை தெரிந்து கொள்ளவும் எளிமையான 10 சமையல் குறிப்புகள் இந்த பதிவில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் பதிவை படித்து பலன் பெறலாம். உங்களுக்கு சமையலே தெரியாது என்றாலும் இதை தெரிஞ்சி வச்சுக்கோங்க. எதிர்காலத்தில் பயன்படும்.

குறிப்பு 1:

உளுந்து வடை செய்ய மாவு அரைக்கும் போது, நீர்த்துப் போய்விட்டதா அதில் கொஞ்சம் அவல் சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின்பு வடை தட்டி பாருங்கள். வடை மொறுமொறுப்பாகவும் எண்ணெய் குடிக்காமலும் சூப்பராகவும் வரும்.

- Advertisement -

குறிப்பு 2:

காலையில் அரைத்த தேங்காய் சட்னி மீதமாகி விட்டதா. அதில் கொஞ்சம் புளிக்காத தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம், கார பூந்தி சிறிதளவு சேர்த்து கொஞ்சமாக உப்பு போட்டு, கொத்தமல்லி தழை தூவி, கலந்து மதிய சாப்பாட்டுக்கு பரிமாறினால் சூப்பராக இருக்கும்.

குறிப்பு 3:

எந்த வருவல் செய்வதாக இருந்தாலும் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்வோம். அந்த சூடான எண்ணெயில் கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து, பிறகு காய்கறிகளை சேர்த்து வறுவல் செஞ்சு பாருங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:

சில சமயம் கிழங்குகளை வேக வைக்கும் போது அது எளிதில் வேகாது. எந்த வகை கிழங்காக இருந்தாலும் அதை 10 நிமிடங்கள் கல்லுப்பு சேர்த்து தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, பிறகு வேக வைத்து பாருங்கள் பஞ்சு போல வேகம்.

குறிப்பு 5:

சீரகம், ஓமம், மிளகு இது மூன்றையும் சம அளவு எடுத்துக்கோங்க. லேசாக கடாயில் வறுத்து இதோடு கொஞ்சம் சுக்குப்பொடி, கொஞ்சம் பெருங்காய பொடி சேர்த்து அரைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த சுண்டல் செய்யும் போதும், தாலிக்கும்போது இந்த பொடியை தேவையான அளவு போட்டு சுண்டல் தாளித்துக் கொடுத்தால் வாயு தொல்லை, வயிறு உப்புசம், ஜீரண கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வரவே வராது.

- Advertisement -

குறிப்பு 6:

வாழைக்காயை துணி பையில் போட்டு வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் பழுத்துப் போகாமல், கெட்டுப் போகாமல் இருக்கும். இதேபோல துணி பையில் போட்டு ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம்.

குறிப்பு 7:

சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது அதில் நான்கைந்து வெந்தயத்தையும் போட்டு வேக வைத்தால் சாம்பார் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

குறிப்பு 8:

வெறும் ஏலக்காய்களை ஒரு கவரில் போட்டு சுருட்டி ஃப்ரீசரில் 1/2 மணி நேரம் வச்சிருங்க. அதன் பிறகு அந்த ஏலக்காய்களை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சலித்து எடுத்தால் சர்க்கரை போடாத சூப்பரான ஏலக்காய் பொடி உங்களுக்கு கிடைக்கும். மீதம் இருக்கும் திப்பிகளை அப்படியே தூக்கி டீ தூளில் கொட்டி கலந்திடுங்க. டீ போடும்போது வாசம் இருக்கும்.

குறிப்பு 9:

காய்கறிகள் முக்கால் பாகம் வெந்தவுடன் உப்பு சேர்த்து சமைக்கவும். அப்போதுதான் காய்கறிகளில் இருக்கும் இரும்புச்சத்து முழுமையாக நமக்கு கிடைக்கும்.

குறிப்பு 10:

சட்னி அரைக்கும்போது வர மிளகாய் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைப்பீர்கள். இதோடு 4 அல்லது 5 மிளகையும் காரத்திற்கு சேர்த்துக்கோங்க. உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியம்.

- Advertisement -