கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் விலக ஸ்லோகம்

Arthanareswarar-2-
- Advertisement -

இல்லறமே நல்லறமாகும் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கின்றனர். திருமணம் எனும் உயர்வான பந்தத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து ஒருவரை ஒருவர் அடக்க நினைக்காமல், இருவரும் உள்ளன்போடு வாழ்ந்தாலே திருமணம் வெற்றியடையும். ஆனால் சில தம்பதிகளுக்கு திருமணத்திற்கு பிறகான வாழ்வில் மனஸ்தாபங்களால், வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர். ஒரு சிலர் தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். சிலர் மணமுறிவு பெற முயல்கின்றனர். இப்படிப்பட்ட தம்பதிகள் சிவசக்தி இணைப்பால் தோன்றிய ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரின் இந்த ஸ்லோகத்தை படித்தால் பிரச்சனைகள் தீரும்.

Arthanareswarar

 

- Advertisement -

அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகம்

சாம்பேய கௌரார்த சரீரகாயை
கர்பூர கௌரார்த சரீரகாய
தம்மில்லகாயை ச ஜ்டாதராய
நம:சிவாயை ச நம:சிவாய

கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை
சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய
க்ருதஸ்மராயை விக்ருதய்மராய
நம:சிவாயை ச நம:சிவாய

- Advertisement -

ஜணத் க்வணத் கங்கண நூபுராயை
பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய
நம:சிவாயை ச நம:சிவாய

விசால நீலோத்பல லோசனாயை
விகாஸி பங்கேருஹ லோசனாய
ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய
நம:சிவாயை ச நம:சிவாய

- Advertisement -

மந்தார மாலா கலிதாலகாயை
கபால மாலாங்கித கந்தராய
திவ்யாம்பராயை ச திகம்பராய
நம:சிவாயை ச நம:சிவாய

அம்போதர ச்யாமல குந்தலாயை
தடித் ப்ரபா தாம்ரஜடாதராய
நிரீச்வராயை நிகலேச்வராய
நம:சிவாயை ச நம:சிவாய

ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய காயை
ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய
ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே
நம:சிவாயை ச நம:சிவாய

ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை
ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய
சிவான்விதாயை ச சிவான்விதாய
நம:சிவாயை ச நம:சிவாய

ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம் யோ
பக்த்யா ஸ மான்யோ புவி தீர்கஜீவீ
ப்ராப்னோதி ஸெளபாக்ய மனந்தகாலம்

சிவன் மற்றும் பார்வதி என்கிற இரு தெய்வங்களை ஒன்றாக உருவகித்து போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை கணவனும் அல்லது மனைவி யாரவது ஒருவர் துதிக்கலாம் அல்லது கணவன் மனைவி ஆகிய இருவரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்றாக அமர்ந்து, இந்த ஸ்லோகத்தை படிப்பதால் கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படாது. இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத நிலை உண்டாகும். பிரிந்து வாழ்தல் மற்றும் விவாகரத்து போன்ற துர்நிலைகள் ஏற்படாது.

Arthanareswarar

உலகில் இருக்கும் உயிர்கள் அனைத்திலும் ஆண் பெண் என இரு இனங்கள் உண்டு. இவை இரண்டும் இணைவதால் புதிய உயிர்கள் தோன்றுகிறது. மனிதர்களிலும் ஆண் மற்றும் பெண் திருமண பந்தத்தால் ஒன்றிணைகின்றனர். ஆனால் காலங்கள் செல்ல கணவன் மற்றும் மனைவி இடையே பல கருத்துவேறுபாடுகள் தோன்றுகிறது. சிவன் என்கிற பேராண்மையும் சக்தி என்கிற தெய்வீக பெண்மையும் இணைந்த தத்துவம் தான் அர்த்தநாரீஸ்வர தத்துவம். இந்த தத்துவத்தை போற்றும் மேற்கண்ட ஸ்லோகத்தை தம்பதிகள் படிப்பது அவர்களுக்கு நன்மை அளிக்கும்.

இதையும் படிக்கலாமே:
துன்பங்களை போக்கும் அம்மன் துதி

இது போன்ற மேலும் பல மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Arthanareeswarar slokam in Tamil or Arthanareeswarar slogam in Tamil. Arthanareeswarar mantra in Tamil needs to be chanted on Tuesday and Friday to get good benefits.

- Advertisement -