அறுசுவையும் சேர்ந்தது போல ஒரு சட்னி செய்து சாப்பிட ஆசைப்படுறீங்களா? வெறும் 10 நிமிடத்தில் அறுசுவையில் சட்னி ரெசிபி இதோ உங்களுக்கு.

chutney7
- Advertisement -

அறுசுவையில் சட்னி செய்ய வேண்டும் என்றதுமே ரொம்பவும் ரெசிபி கஷ்டமாக இருக்குமோ என்று பயந்து விடாதீர்கள். ரொம்ப ரொம்ப ஈஸியா நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து, இந்த சட்னியை செய்யலாம். இதை மங்களூர் சட்னி என்றும் சொல்லுவார்கள். சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். அதேசமயம் ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியும் கூட. இட்லி தோசை சப்பாத்தி இவைகளுக்கு பெர்ஃபெக்ட்டான சைட் டிஷ். கொஞ்சம் வித்தியாசமான சுயவையில் ரெசிபி ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தால் இந்த சட்னியை முயற்சி செய்யலாம்.

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அந்த எண்ணெயில் வெந்தயம் 1/4 ஸ்பூன், போட்டு லேசாக சிவக்க வைக்கவும். அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம் 1 போட்டு அதை கண்ணாடி பதம் வரும் வரை மட்டும் வதக்கவும். ரொம்பவும் நிறம் மாறும் அளவுக்கு வதக்க வேண்டாம். அடுத்து நறுக்கிய தோல் சீவிய இஞ்சி 1 இன்ச், கருவேப்பிலை 1 கொத்து, பொடுகடலை 1 ஸ்பூன், புளி நெல்லிக்காய் அளவு, நாட்டு சர்க்கரை 1 ஸ்பூன், மிளகாய் தூள் 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விடவும்.

- Advertisement -

தக்காளி சேர்த்த பின்பு, தக்காளி வதங்கியவுடன் அடுத்தடுத்து ஒவ்வொரு பொருட்களாக சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக சின்ன டம்ளரில் 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு ஐந்து நிமிடம் எல்லா பொருட்களையும் வேக வைக்கவும். தண்ணீர் சுண்டி எல்லா பொருட்களும் வெந்து வந்தவுடன் இந்த விழுதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்தால் அறுசுவை நிறைந்த சட்னி தயார்.

இதில் தேங்காய் சேர்க்காமல் அரைத்தாலும் சுவையாக தான் இருக்கும். தேவைப்பட்டால் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலை போட்டு அரைத்தாலும் இதன் சுவை இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரைத்த இந்த சட்னியை கொஞ்சம் கெட்டியாகவும் பரிமாறலாம். தண்ணீராக கரைத்தும் பரிமாறலாம்.

- Advertisement -

ஒரு தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் எண்ணெயில், கடுகு, உளுந்து, வர மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து அந்த தாளிப்பை இந்த சட்னியில் கொட்டி கலந்து சுட சுட இட்லி தோசை சப்பாத்திக்கு பரிமாறி பாருங்கள். வித்தியாசமான சுவையில் எல்லோரும் விரும்பும் படி ஒரு சுவையில் அட்டகாசமான இந்த சட்னி கிடைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: ரேஷன் துவரம் பருப்பு இருந்தா போதும் ஆரோக்கியம் நிறைந்த முருங்கைக்கீரை வடை 10 நிமிடத்தில் வீட்டிலேயே இப்படி அருமையா மொறுமொறுன்னு சுட்டு எடுக்கலாமே!

அறுசுவையும் நிறைந்த இந்த சட்னி ரெசிபி யாரும் மிக்ஸ் பண்ணாதீங்க. கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -