ரேஷன் துவரம் பருப்பு இருந்தா போதும் ஆரோக்கியம் நிறைந்த முருங்கைக்கீரை வடை 10 நிமிடத்தில் வீட்டிலேயே இப்படி அருமையா மொறுமொறுன்னு சுட்டு எடுக்கலாமே!

murungai-keerai-vadai1_tamil
- Advertisement -

ரேஷன் துவரம் பருப்பு இருந்தால் போதும் சூப்பரான ஆரோக்கியம் நிறைந்த முருங்கைக்கீரை வடை ரொம்ப ஈசியாக செய்துவிடலாம். முருங்கைக் கீரையில் ஏராளமான இரும்பு சத்து ஒளிந்துள்ளது. ஒரு கைப்பிடி அளவிற்கு முருங்கைக்கீரை உங்கள் வீட்டில் இருந்து பறித்து வைத்துக் கொண்டால் போதும், 10 நிமிடத்தில் ரேஷன் துவரம் பருப்பை வைத்து இந்த வடையை தயாரித்து விடலாம். அருமையான இந்த துவரம் பருப்பு முருங்கை கீரை வடை எப்படி தயாரிப்பது? என்பதை தான் இனி தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – ஒரு கப், வரமிளகாய் – 2, கல் உப்பு – அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – இரண்டு, பூண்டு பற்கள் – 4, முருங்கைக்கீரை – ஒரு கப், அரிசி மாவு – 2 ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை
முருங்கைக் கீரை வடை செய்வதற்கு முதலில் ரேஷன் துவரம் பருப்பை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் நல்ல தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதனுடன் ரெண்டு வர மிளகாய்களையும் காம்பு நீக்கி அதிலேயே ஊற வையுங்கள். ரெண்டு மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரை எல்லாம் சுத்தமாக வடிகட்டி விட்டு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் இவற்றை சேர்த்து, அரை ஸ்பூன் கல் உப்பு போட்டு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதுடன் தோல் நீக்கி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்றை உதிர்த்து சேருங்கள். சிறு பச்சை மிளகாய் இரண்டினை எடுத்து காம்பு நீக்கி பொடி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் நான்கு பூண்டு பற்களை எடுத்து தோல் உரித்து இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு கப் அளவிற்கு முருங்கை இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மாவு கெட்டியாக இருப்பதற்கு இரண்டு ஸ்பூன் அளவுக்கு நீங்கள் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு எல்லாவற்றையும் நன்கு ஒன்றுடன் ஒன்றாக கலந்து விட்டு சிறு சிறு உருண்டையாக உருட்டி தட்டையாக வடை போல பின்னர் தட்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சருமம் பளபளக்க பீர்க்கங்காய் கடலைப்பருப்பு கூட்டு 10 நிமிடத்தில் எப்படி தயாரிப்பது? நீர் சத்து காயில் இவ்வளவு நன்மைகளா?

அவ்வளவுதான் இப்பொழுது அடுப்பில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு வடைகளாக போட்டு எல்லா புறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்தால் சுவையான மொறு மொறுன்னு முருங்கைக்கீரை வடை ரெசிபி நொடியில் தயார்! இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க சாப்பாட்டுக்கும், மாலை நேர டீக்கும் சாப்பிட அருமையாக இருக்கும்.

- Advertisement -