கட்டிப் பெருங்காயத்தை தூள் செய்ய சூப்பரான ஐடியா

perungayam
- Advertisement -

தூள் பெருங்காயம் கடைகளில் விற்கின்றது. வாங்கினால் அந்த டப்பாவில் ஓட்டையை போட்டு சமையலுக்கு அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். ரொம்ப ரொம்ப சுலபம். ஆனால் அந்த தூள் பெருங்காயத்தில், எந்த அளவுக்கு கலப்படம் இல்லாமல் இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. கட்டி பெருங்காயத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது, தூள் பெருங்காயத்தின் மனமும் குறைவு தான்.

கட்டிப் பெருங்காயம் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதை நைசாக பவுடர் ஆக்க முடியவில்லை. இதற்கு ஏதாவது ஐடியா இருக்குதா என்று கேட்கும் இல்லத்தரசிகளுக்காக இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு.

- Advertisement -

கட்டிப் பெருங்காயத்தை தூள் செய்ய வீட்டு குறிப்பு

கட்டிப் பெருங்காயத்தை தூள் செய்ய ஒரு தோசை கல் இருந்தால் போதும். இந்த ஐடியா தெரியுமா உங்களுக்கு. ஒரு தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்து சூடு செய்து விடுங்கள். அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும். கட்டி பெருங்காயத்தை அந்த தோசை கல்லின் மீது வைத்து தோசை கரண்டியை வைத்து நன்றாக அழுத்தி அழுத்தி இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி போடுங்கள்.

அந்த சூட்டில் பெருங்காயம் லேசாக உருகுவதை உங்களால் நிச்சயம் உணர முடியும். அதாவது கட்டியா இருக்கக்கூடிய பெருங்காயம் கொஞ்சம் இலகி வரும். ஒரு சின்ன காபி குடிக்கும் டபரா எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டபராவை பெருங்காயத்தின் மீது வைத்து அப்படியே லேசாக அழுத்தி விட வேண்டும். தோசைக்கல் மேலே பெருங்காயத்தை வைத்தே இதை நீங்கள் செய்யலாம். அந்த பெருங்காயம் இன்னும் கொஞ்சம் தட்டை வடிவில் பெருசாக மாறும்.

- Advertisement -

மீண்டும் தோசை கரண்டியால் திருப்பி திருப்பி போட்டு தோசை கல்லிலேயே அந்த பெருங்காயத்தை சூடு செய்யுங்கள். அந்த சமயம் பெருங்காயம் அப்படியே பூரி போல உப்பி வரும்போது, நடுவே கத்தியை எடுத்து சின்னதா ஒரு ஓட்டை போட்டுவிட்டுவிட மீண்டும். மீண்டும் திருப்பி போட்டு அந்த பெருங்காயத்தை தோசைக்கல்லில் சூடு செய்யும்போது, ஒரு கட்டத்தில் அந்த பெருங்காயத்தில் இருக்கும் ஈரப்பதம் எல்லாம் நீங்கி, அந்த பெருங்காயம் ஒரு ட்ரையான பக்குவத்தில் வந்ததை உணர முடியும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த பெருங்காய கட்டி ஆறியதும் ஒரு கத்தியை கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்தால் சூப்பரான தூள் பெருங்காயம் தயார். அத்தனை வாசத்தோடு சுத்தமான கலப்படம் இல்லாத பெருங்காயத்தூளை நாமே தயார் செய்து விட்டோம். பிறகு இதை நீங்கள் டப்பாவில் கொட்டிக் கொண்டு தேவை எனும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: காப்பர் வாட்டர் கேன் சுத்தம் செய்யும் முறை

மீண்டும் இது கட்டியாக மாறாது. என்ன கட்டி பெருங்காயம் பயன்படுத்தும் வேண்டும் என்ற ஆசை இருக்கும் இல்லத்தரசிகளுக்கு, இந்த குறிப்பு நிச்சயம் பயனுள்ளதாக அமையும் தானே. உங்களுக்கு இந்த வீட்டுக்குறிப்பு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு பிடிச்சவங்களுக்கும் இந்த டிப்ஸ ஷேர் பண்ணுங்க.

- Advertisement -