- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆசைகளை நிறைவேற்றும் சிவ மந்திரம்

ஆசைகளை நிறைவேற்றும் சிவ மந்திரம்

- Advertisement -

மாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பிரதோஷ நாள் என்பது மார்ச் மாதம் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு வழிப்பாடும் பலவிதமான பலன்களை தரும். அந்த வகையில் நம்முடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கு மாசி வளர்பிறை பிரதோஷ நாள் அன்று சிவபெருமானை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆசைகளை நிறைவேற்றும் சிவ மந்திரம்

சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ நாள் என்பது மார்ச் மாதத்தின் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வருகிறது. இந்த நாளில் நாம் அருகில் இருக்கக்கூடிய சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. வீட்டில் சிவலிங்கம் இருக்கும் பட்சத்தில் தங்களால் இயன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்தும் வழிபாடு செய்ய்லாம். ஒருவேளை ஆலயத்திற்கு செல்ல இயலாத பட்சத்தில் இருப்பவர்களும், வீட்டில் அபிஷேகம் செய்ய இயலாதவர்களும் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை கூறினால் அவர்களுடைய நாள்பட்ட நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த மந்திரத்தை மார்ச் மாதம் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் கூற வேண்டும். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். வீட்டில் இருப்பவர்கள் பூஜையறையில் சிவபெருமானுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அந்த தீபத்தை பார்த்தவாறு கூறுவது மிகவும் சிறப்பு. அதேபோல் ஆலயத்திலும் கூறலாம். வேலை செய்யும் இடத்திலும் அமைதியாக அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூறலாம். ஒருவேளை அந்த நேரத்தில் கூற இயலாது என்று நினைப்பவர்கள் அன்று இரவு 12 மணிக்குள் சிவபெருமானை நினைத்து இந்த மந்திரத்தை கூறலாம்.

குறைந்தபட்சம் 10 நிமிடத்தில் இருந்த அதிகபட்சம் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக மனதில் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நினைத்துக் கொண்டு தங்களுடைய நீண்ட நாள் ஆசையாக ஓதாவது ஒரு ஆசை நிறைவேற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ரீங் சிவ சிவ”

இதையும் படிக்கலாமே: கேட்ட வரம் அருளும் மாசி வளர்பிறை பிரதோஷம்

மிகவும் எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை முழு மனதோடு சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நினைத்து பிரதோஷ நேரத்தில் கூறுபவர்களுக்கு அவர்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்