அஷ்ட ஐஸ்வரியங்களும் உங்களிடம் நிரந்தரமாக ஐக்கியமாகி விடும். பூஜை அறையில் அமர்ந்து இந்த மந்திரத்தை 1 முறை உச்சரித்தால்!

ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் வழிபாடுகள் பல இருந்தாலும், இந்த வழிபாட்டிற்கும், இந்த மந்திரத்திற்கும் ஒரு அற்புதமான சிறப்பு உண்டு. நம்முடைய வீட்டில் பொன் பொருள் செல்வத்தோடு சேர்ந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒரு பெரிய மகானின் ஆசீர்வாதத்தோடு பெறப் போகின்றோம். சிலருக்கு இறைவழிபாட்டில் நம்பிக்கை இருக்கும். சிலருக்கு இறை வழிபாட்டில் நம்பிக்கை இருக்காது. ஆனால் இறை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, குருமார்களை நம்புவார்கள். அதாவது மனித பிறவி எடுத்து, மகானாக மாறிய சாய்பாபா, காஞ்சி மகா பெரியவா போன்றவர்களை மனமுருகி வழிபாடு செய்வார்கள்.

kanji periyavar

அந்த வரிசையில் மகாபெரியவர் நமக்காக அருளிய ஐஸ்வர்யங்களை அள்ளி தர கூடிய ஒரு அற்புதம் மந்திரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வீட்டில் மகா பெரியவா நிரந்தரமாக குடி கொண்டு, அந்த வீட்டிலிருக்கும் கஷ்டத்தை முழுமையாக நிவர்த்தி செய்வார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது எந்த மந்திரம் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா.

வீட்டிலிருக்கும் மகாலட்சுமியின் ஸ்வரூபமான பெண்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் மிகவும் நல்லது. ஆண்களும் தாராளமாக இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். அதில் தவறொன்றும் கிடையாது. காலை எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, மகாபெரியவரின் திருவுருவப்படம் இருந்தால், அதற்கு குங்குமப்பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து அந்த திருவுருவப் படத்தின் முன்பாக ஒரு மரப் பலகையின் மீது அமர்ந்து வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும், அஷ்ட ஐஸ்வரியங்களும் வீட்டில் குடிகொள்ள வேண்டும், என்ற வேண்டுதலை வைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

gajalakshmi

மகாபெரியவரின் திருவுருவப்படம் இல்லை என்றாலும் பரவாயில்லை, நீங்கள் தீபம் ஏற்றி வைத்திருக்கும் ஜோதிடரை மஹா பெரியவ பாவித்துக்கொண்டு வழிபாட்டை தொடங்கலாம். உங்களுக்காக மகா பெரியவா அருளிய அதிர்ஷ்டத்தை அள்ளித் தர கூடிய ‘அஷ்ட ஐஸ்வர்ய சித்தி மகாமந்திரம் மந்திரம்’ இதோ!

- Advertisement -

ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு மகா பெரியவா!
மம சர்வாபீஷ்டம் சாதய சாதய! ஆபதோ நாசய நாசய
சம்பதோ ப்ராபய ப்ராபய! ஸஹகுடும்பம் வர்த்தய வத்ர்தய!
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு பாஹிமாம் ஸ்ரீ ஜகத்குரு துப்யம் நம

இந்த மந்திரத்தை மனமுருகி ஒரு நாளைக்கு ஒரு முறை உச்சரித்தால் கூட போதும். தினம்தோறும் மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளிலும், செவ்வாய்க் கிழமைகளிலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

kanji-periyava

உங்களுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் 18 முறை அல்லது 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வருவது மேலும் அதிகப்படியான நன்மையை கொடுக்கும். வீட்டில் ஐஸ்வர்யம் நிச்சயம் நிலைத்திருக்கும், வறுமை நீங்கும், கஷ்டங்கள் காணாமல் போகும். என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வேப்பிலையை வைத்து இவ்வளவு விஷயம் பண்ண முடியுமா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.