அஷ்டலஷ்மி துதிகள்

lakshmi
- Advertisement -

ஒருவர் தனது வாழ்வில் அஷ்டலட்சுமிகளின் அருள் பெற்றாலே போதும், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து செல்வங்களும் அவரை தேடி வந்துவிடும். மகா விஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷ்மியின் அம்சங்களைக் கொண்ட அஷ்ட லக்ஷ்மிகளையும் வழிபட இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். உங்களுக்கான அஷ்டலக்ஷ்மி மந்திரம் இதோ.

 ashta-lakshmi

1. தன லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

- Advertisement -

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

2 வித்யா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

- Advertisement -

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

 ashta-lakshmi

3 தான்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

- Advertisement -

4 வீர லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

 ashta-lakshmi

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

5 ஸௌபாக்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

 ashta-lakshmi

6 சந்தான லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

7 காருண்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

8 ஆதி லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்

வெள்ளிக்கிழமையின் போது வீட்டில் நெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை உச்சரித்து மஹாலட்சுமியை வழிபடும்போது சகல சௌபாக்கியங்களையும் பெற்று, அஷ்டலட்சுமிகளின் அருளையும் பெற முடியும். அஷ்டலக்ஷ்மியானவள் நம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களில் இருந்தும் விமோசனம் அளிப்பவள்.

இதையும் படிக்கலாமே
துன்பங்களே இல்லாமல் வாழ வெறும் ஐந்து நிமிடம் வேலனுக்கு இதை செய்தால் போதும்.

English Overview:
Here we have Ashtalakshmi stotram. Ashtalakshmi thuthigal. Ashtalakshmi slokas in Tamil. Ashtalakshmi slogam in Tamil.

- Advertisement -