அஷ்டமி நல்ல நாளா ? அஷ்டமியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?

ashtami

ஒரு மாதத்தில் வளர்பிறைக்காலத்தில் 14 திதிகளும், தேய்பிறைக் காலத்தில் 14 திதிகளும் என 28 நாட்கள் வருகிறது மீதம் இரண்டு தினங்களில் ஒன்று அமாவாசை மற்றொன்று பௌர்ணமி என மொத்தம் 30 நாட்கள் என ஒரு மாதம் பூர்த்தியடைகிறது. இத்திதிகளில் “அஷ்டமி திதியும்” ஒன்று. இந்த அஷ்டமி திதி சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறைக் காலத்தில் எட்டாவது தினமாக வருகிறது.

sani bagavaan

பொதுவாக ஜோதிட மற்றும் எண் கணித சாஸ்திரம் படி 8 என்பது சனிபகவானின் ஆற்றல் கொண்ட ஒரு எண்ணாகும். புராண, இதிகாசங்களின் படி சனி பகவான் ஒரு நீதி தேவன், அதனால் எவர் ஒருவர் சிறிய அளவு தீவினையை புரிந்திருந்தாலும், அதற்கான தண்டனையை உடனே வழங்கி நீதியை நிலை நாட்டுபவர். இதன் காரணமாகவே சனிபகவானையும், அவரின் ஆற்றல் கொண்ட 8 ஆம் எண்ணையும் கண்டு பெரும்பாலானோர் கலக்கம் அடைகின்றனர். அப்படிப்பட்ட சனிபகவானின் தாக்கம் இந்த அஷ்டமி திதியில் ஏற்படுகிறது.

பொதுவாக வளர்பிறை மற்றும் தேய்பிறைக் காலத்தில் வரும் எந்த ஒரு அஷ்டமி திதியிலும் சுபகாரியங்கள் செய்யப்படுவதில்லை. ஆனால் இறைவழிபாடுகள் செய்ய வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி இரண்டுமே சிறப்பான நாட்களாகும். வளர்பிறை அஷ்டமியில் செல்வம் பெருக திருமாலின் இதயத்தில் வீற்றிருப்பவளான “லட்சுமியையும்”, தேய்பிறை அஷ்டமியில் சனி பகவானின் தோஷத்தை நீக்க “பைரவர்” வழிபாடும் செய்யலாம்.

அஷ்டமியில் பிறந்தவர்கள் குணாதிசயங்கள் :

இத்திதியில் பிறந்தவர்கள் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். பிறரின் துன்பங் கண்டு இரங்குபவர்களாக இருப்பார்கள். சுதந்திர உணர்வு அதிகமிருக்கும். நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் மனதினைப் பெற்றிருப்பார்கள்.

- Advertisement -

astrology

அஷ்டமி திதியில் குழந்தை பிறப்பது நல்லதா?

ஆவணி மாத அஷ்டமி திதியில் தான் “கிருஷ்ண பரமாத்மா” அவதரித்தார். அப்படி அவதரித்த கண்ணன் தன் சொந்த தாய்மாமனான கம்சனை வதம் புரிந்தார். இதன் காரணமாகவே பெரும்பாலானோர் தங்களுக்கு அஷ்டமி திதியில் பிறக்கும் ஆண் குழந்தையால், அக்குழந்தையின் தாய்மாமனுக்கு ஆகாதென்று அஞ்சுகின்றனர்.

krishnar

முதலில் கண்ணன் ஒரு தெய்வ அவதாரம், நாம் மனித அவதாரம் என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இப்படிப்பட்ட அமைப்பில் பிறந்த பெரும்பாலான குழந்தைகளால் அவர்களின் தாய்மாமன்களுக்கு எவ்வொரு பாதிப்பும் ஏற்படாமல் அனைவரும் சுகமாகத் தான் வாழ்கிறார்கள். ஆதலால் அஷ்டமி திதியில் ஆண், பெண் என எந்த குழந்தைப் பிறந்தாலும் எவ்வித பாதகமுமில்லை. அதையும் மீறி பாதிப்பு ஏற்படுவதாக அஞ்சுபவர்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்று விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து வர நலம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
அமாவாசை நல்ல நாளா ? கெட்ட நாளா ? – ஒரு ஆன்மீக ஆய்வு

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள் உள்ளிட்ட பல முக்கிய குறிப்புகளை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Overview:
Here we spoke about Ashtami tithi in tamil. Is Ashtami good or bad day, Effects of baby born of Ashtami and What will be charter of child born on Ashtami tithi are explained here in Tamil.