முழுத்தகுதியுடன் இருக்கும்போதே அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருகிறதா ? – பி.சி.சி.ஐ

ashwin

இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 30ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றே கூறவேண்டும். அணி கோலி தலைமையிலான இந்திய அணி இப்போது சுப்ரீம் பார்மில் உள்ளது.

ashwin

தற்போது உள்ள இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடிவருவதால் புதியதாக எந்த வீரரையும் சேர்க்கும் திட்டம் என்பது இல்லை. எனவே உலகக்கோப்பை வரை இந்த இல்லை. அணியே தொடரும் என்று தோன்றுகிறது. உலகக்கோப்பை தொடர் முடிந்ததே அணியின் அடுத்த புது வீரர்களுக்கான தேர்வு இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் கடந்த 2011 மற்றும் 2015 உலகக்கோப்பையில் பங்கேற்ற அனுபவம் உள்ளவர். மேலும், சிறப்பான பார்மில் இருக்கும்போதே இவரை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியது இந்திய கிரிக்கெட் தேர்வுகுழு. தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் புறக்கணிக்கப்படும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

koli 1

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறவில்லை என்றால் அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்றே அர்த்தம். பல சீனியர் வீரர்களை இந்த நிலைமைக்கு கொண்டு சென்று அவர்களை ஓய்வு பெற வைப்பது தவறு. அவர்களுக்கான வாய்ப்பினை தந்து அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அணியின் இருந்து அவர்களை நீக்கலாம் என்பதே ரசிகர்களின் மனதில் தோன்றுகிறது.

ஜேக்கப் மார்ட்டின் மருத்துவ செலவிற்கு உதவியளிக்க முன்வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்