ஜேக்கப் மார்ட்டின் மருத்துவ செலவிற்கு உதவியளிக்க முன்வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன்

jacob 2

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜேகப் மார்ட்டின் என்பவர் இந்திய அணிக்காக 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர். அவர் சில நாட்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். அதன் காரணமாக பலத்த காயத்துடன் மருத்துவமணையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

jacob 1

இவரது மருத்துவசெலவு ஒருநாளைக்கு 70 ஆயிரம் ருபாய் ஆகிறது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், அவர்களால் சிகிச்சையை தொடரமுடியாத நிலையில் பரோடா கிரிக்கெட் சங்கத்தின் உதவியை நாடினர். பரோடா கிரிக்கெட் சங்கம் அவரது குடும்பத்திரத்திற்கு உடனடியாக 3 லட்சம் வழங்கினர். அதுமட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் 5 லட்சம் வழங்கியது.

ஆனால், இந்த தொகை அவரது மருத்துவ செலவிற்கு போதுமா என்று தெரியாத நிலையில் அவரது குடும்பத்தினர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியின் செவிக்கு இந்த செய்தியை கொண்டு சென்றனர். கங்குலியின் தலைமையின் கீழ்தான் ஜேக்கப் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ganguly

இந்நிலையில் கங்குலி அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். இதுகுறித்து கங்குலி தெரிவித்ததாவது : ஜேக்கப் இந்திய அணியில் என்னுடைய தலைமையில் அறிமுகம் ஆனவர். அவரின் இந்த விபத்து எனக்கு இப்போது தான் தெரிய வந்தது. மேலும், அவரது மருத்துவ செலவு எவ்வளவு ஆனாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். விரைவில் அவர் நலம் பெற்று வீடு திரும்ப பிராத்திக்கிறேன் என்று கூறி அவரது குடும்பத்தினருக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

பணம் கட்ட இயலாத நிலையில் உயிருக்கு போராடும் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் – வைரலாகும் பகிர்வு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்