அஸ்வினி நட்சத்திர பரிகாரம்

aswini-parigaram
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகள் எப்படி முக்கியமானதோ அது போன்றே ஒரு நபர் பிறக்கும் நட்சத்திரமும் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஒருவர் பிறந்த நட்சத்திரம் அந்த நபரின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்வின் நன்மை, தீமைகளை முடிவு செய்யும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடும் நட்சத்திரங்கள் எண்ணிக்கை 27 ஆக இருக்கின்றன. அதில் முதலாவதாக வரும் “அஸ்வினி நட்சத்திரம்” பற்றியும், அந்நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

kethu

ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்படப்படும் விண்ணில் இருக்கும் 27 நட்சத்திரங்களில் முதலாவதாக வருவது அஸ்வினி நட்சத்திரமாகும். இந்த அஸ்வினி நட்சத்திரம் நவகிரகங்களில் கேது பகவானுக்குரிய நட்சத்திரமாக இருக்கிறது. இந்த நட்சத்திரத்தின் தேவதைகளாக குதிரை முகம் கொண்ட அஸ்வினி தேவர்கள் இருக்கின்றனர். நற்குணங்கள் மற்றும் தீவிர இறைநம்பிக்கை, ஆன்மீக தேடல் கொண்ட அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் அதிகம் நன்மைகள், அதிர்ஷ்டங்களை பெறவும் கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது நல்லது.

- Advertisement -

27 நட்சத்திரங்களுக்கும் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு விருட்சம் என 27 விருட்சங்கள் பற்றி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அஸ்வினி நட்சத்திரத்தின் விருட்சமாக “எட்டி மரம்” இருக்கிறது. இந்த எட்டி மரத்தை சிவன் கோவில்களில் உங்கள் நட்சத்திர தினத்தில் நடுவதாலும், அந்நட்சத்திர தினத்தில் எட்டி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவிலுக்கு சென்று, அங்குள்ள இறைவனையும், எட்டி மரத்தையும் வழிபடுவதால் உங்களின் நட்சத்திர தோஷங்கள் நீங்கும். அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அதி தெய்வமாக சரஸ்வதி தேவி இருக்கிறார். மாதந்தோறும் வரும் உங்கள் நட்சத்திர தினத்தில் சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களை கூறி வழிபட வேண்டும்.

aswini devathas

வியாழக்கிழமைகளில் உங்களுக்கு அருகாமையிலிருக்கும் லட்சுமி நாராயணன் கோவிலுக்கோ அல்லது ஸ்ரீ சாய் பாபா கோவிலுக்கோ சென்று ஒரு சீப்பு சிறிய ரக வாழைப்பழங்களை நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். தினந்தோறும் உங்கள் நட்சத்திரத்திற்குரிய தேவதைகளான “அஸ்வினி தேவர்களை” வணங்கி மற்ற பணிகளை செய்ய தொடங்கள் வேண்டும். மருந்துகள் வாங்க இயலாத பொருளாதார வசதி குறைந்தவர்களுக்கு அவர்களுக்குரிய மருந்துகளை வாங்கி தருவது சிறந்த பரிகாரம் ஆகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
நோய்கள் நீங்க, உடலாரோக்கியம் மேம்படுவதற்கான பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ashwini natchathiram pariharam in Tamil. It is also called as Ashwini nakshatra male, female pariharam in Tamil or Ashwini nakshatra remedies in Tamil.

- Advertisement -