இந்த தவறைகளை எல்லாம் செய்தால் நிச்சயமாக நம்மிடம் இருந்து அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் தெரியுமா?

lakshmi devi
- Advertisement -

நமது நாட்டில் செல்வமாகிய பணத்தை பெரும்பாலானோர் லட்சுமி என்றே அழைக்கின்றனர். அதற்கு காரணம் நமது பாரம்பரிய கலாச்சாரத்தில் ஒரு மனிதனுக்கு கிடைக்கின்ற செல்வங்கள் அனைத்தும் செல்வங்களின் கடவுளான லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் இல்லாமல் கிடைப்பதில்லை என்பது திடமான கருத்தாக உள்ளது. அத்தகைய ஆற்றல் வாய்ந்த செல்வ மகளான லட்சுமி தேவி அஷ்ட லட்சுமிகளாக நம் ஒவ்வொருவரின் உடலிலும் வீற்றிருக்கிறாள் என “மகா மந்திர போதிணி” என்கிற சாஸ்திர நூல் கூறுகின்றது. அந்த அஷ்டலட்சுமி களின் அருள் ஆற்றல் எப்போதும் நமக்கு கிடைக்க நாம் என்ன செய்ய கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ashta-lakshmi

மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரின் உடலின் எட்டு பகுதிகளில் அஷ்டலட்சுமிகளாக லட்சுமி தேவி வாசம் செய்கின்றாள். அதில் முதலாவதாக ஆதிலட்சுமி எனப்படும் லட்சுமிதேவி நமது பாதத்தில் வசிப்பதாக ஐதீகம். அசுத்தமான இடங்களில் நடப்பது, அசுத்தமான விடயங்களை மிதித்து விட்டு கால்களை சுத்தமாக கழுவாமல் இருப்பது போன்ற காரணங்களால் இந்த ஆதிலட்சுமி நம்மை விட்டு நீங்குவதாக கூறப்படுகின்றது. மேலும் பிறரை தெரியாமல் நமது பாதத்தால் மிதித்து விட்டால், உடனே “சிவ சிவ” என்கிற சிவபெருமானின் நாமத்தை கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்கா விட்டால் ஆதி லட்சுமி கோபம் கொண்டு நமது பாதத்திலிருந்து விலகிவிடுவாள்.

- Advertisement -

முட்டிக்கு மேலே முழங்கால் பகுதியில் ‘கஜலட்சுமி” வசிப்பதாக ஐதீகம். உணவு தானியங்களான நெல், கோதுமை போன்றவற்றை மிதிப்பது, கால் நீட்டிக் கொண்டு புத்தகங்களை படிப்பது, இளையோர்களை முதியோர்களையும், தெய்வங்களையும் நோக்கியவாறு கால் நீட்டிக் கொண்டு அமர்வது போன்ற காரணங்களினால் கஜலட்சுமி நமது முழங்கால் பகுதியில் வாசம் செய்வதை நிறுத்தி விலகி விடுகிறாள்.

kaal

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை பாக்கியத்தை தருகின்ற இடுப்புக்கு கீழான பகுதியில் “வீர்யலட்சுமி” வசிப்பதாக ஐதீகம். பிற மனிதர்களை தொடர்ந்து திட்டுவதாலும், அவமானபடுத்துவதாலும் ஏற்படும் சாபத்தினால் இந்த பகுதியில் வீற்றிருக்கும் வீர்யலட்சுமி விலகி, அந்த நபரின் வம்சத்தையே சபித்து விடுவதாக சாஸ்திரம் கூறுகின்றது.

- Advertisement -

ஒரு மனிதனின் இடது தொடை என்பது அந்த மனிதனின் வாழ்க்கைத் துணைக்கு உரிய இடமாக கூறப்படுகின்றது. இந்த இடது தொடை பகுதியில் தான் வெற்றிகளை கொடுக்கும் “விஜயலட்சுமி” வாசம் செய்வதாக ஐதீகம். எனவே தங்கள் வாழ்க்கை துணையை தவிக்கவிட்டு பிறன்மனை நோக்குவது, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்ற செயல்களால் அந்த நபரின் இடது தொடைப்பகுதியில் வாசம் செய்யும் விஜயலட்சுமி அந்த மனிதரை விட்டு விலகி விடுகிறாள்.

marriage

அதே போன்று ஒரு மனிதனின் வலது தொடை பகுதியில் “சந்தான லட்சுமி” வாசம் செய்வதாக ஐதீகம். திருமணம் எனப்படும் “கன்னிகாதானம்” சடங்கு செய்யும் சமயம் பெண்ணின் தந்தையானவர் அந்தப் பெண்ணை, தனது வலது தொடையில் அமர்த்தி அப்பெண்ணின் கணவருக்கு கன்னிகாதானம் சடங்கை செய்ய வேண்டும். தவறுதலாக இடது தொடையில் அமரத்தி கன்னிகாதானம் எனப்படும் திருமண சடங்கை செய்தால் சந்தான லட்சுமி அந்த நபரிடமிருந்து விலகி விடுகிறார்.

- Advertisement -

நமது வயிற்றுப்பகுதியில் வாசம் செய்யும் லட்சுமியாக “தானிய லட்சுமி” இருக்கின்றாள். நாம் உண்ட எச்சில் உணவுகள், கெட்டுப்போன உணவுகள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தால் தானிய லட்சுமி நமது வயிற்று பகுதியிலிருந்து விலகி விடுகிறார்.

eating-food

ஒவ்வொரு மனிதனின் இதயப் பகுதியில் “தைரிய லட்சுமி” வாசம் செய்கிறாள். நெஞ்சுக்குள் வஞ்சக எண்ணங்களை ஒளித்து வைத்து, வெளியே சிரித்து பேசி பிறரின் குடி கெடுக்கும் செயல்களை செய்யும் நபர்களிடமிருந்து தைரிய லட்சுமி நிரந்தரமாக விலகி விடுகிறாள்.

நமது கழுத்துப் பகுதியில் கல்வியறிவிற்கு காரணமான “வித்யா லட்சுமி” வாசம் செய்வதாக ஐதீகம். அதிகம் பொய் பேசுதல், கழுத்தில் ருத்ராட்சம், தாலி, போன்ற மங்கள பொருட்களை அணிகலன்களாக அணிந்து கொள்ளாதவர்களின் கழுத்துப் பகுதியில் இருந்து வித்யாலட்சுமி வெளியேறி விடுவதாக சாஸ்திரம் கூறுகின்றது.

ruthratcham

நமது இரண்டு புருவங்களின் மத்தியில் இருக்கும் பகுதியில், நமக்கு எல்லாவிதமான நலன்களையும் தருகின்ற “சௌபாக்கிய லட்சுமி” வீற்றிருப்பதாக ஐதீகம். அழகுக்காக புருவ முடிகளை சிராய்த்து கொள்வதாலும், பெண்கள் பாரம்பரிய குங்கும பொட்டு விடுத்து நவீன ஸ்டிக்கர் பொட்டை நெற்றிப்பொட்டில் இட்டுக் கொள்வதாலும், திருமணமான பெண்கள் நெற்றி தலைமுடி வகிட்டில் குங்குமம் இடாமல் இருப்பதாலும், பொதுவாகவே நெற்றி பொட்டு பகுதியில் திருநீறு, திருநாமம் போன்ற மங்கள அடையாளங்களை கொள்ளாதவர்களின் நெற்றிப் பகுதியிலிருந்து “சௌபாக்கியலட்சுமி”‘ விலகி விடுவதாக “மகா மந்திர போதிணி” நூல் தெரிவிக்கின்றது.

- Advertisement -