ராஜ ராஜேஸ்வரி திரிபுரசுந்தரி கோவில் மகிமை

takling god
- Advertisement -

கடவுள் மனிதனிடம் பேசியதாக சொல்லப்படும் புராண கதைகள் இதிகாச கதைகள் பலவற்றைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். மனித ரூபத்தில் வந்து உதவிய கதைகளையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். சில நேரங்களில் கடவுள்களின் இந்த அற்புதங்களை நாமே கூட உணர்ந்திருப்போம்.

தெய்வங்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் அதிசயம் பற்றி கேள்விபட்டதுண்டா? ஆம் கடவுள்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் அற்புதங்கள் நிகழக் கூடிய ஆலயங்களும் உள்ளது. அதில் என்ன ஆலயம் எங்கு உள்ளது என்பது பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

கடவுள்கள் பேசிக் கொள்ளும் அற்புத திருத்தலம்

நம்பிக்கையுடன் கல்லை வழிபட்டால் கல்லும் தெய்வமாக புலப்படும். இறைவழிபாடு என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் துவங்குவது தான். இத்தகைய நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் தான் இந்த ஆலயத்தில் நடக்கும் அற்புதங்களும் உள்ளது அது என்னவென்று பார்க்கலாம்.

இந்த ஆலயம் பீகார் மாநிலத்தில் உள்ள பஸார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள அம்பிகை ராஜ ராஜேஸ்வரி திரிபுரசுந்தரி. இந்த ஆலயத்தில் அன்னை துர்கா தேவியாக அருள் புரிகிறார். இந்த ஆலயம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாகவும் இதை நிறுவியவர் தாந்திரீத் பவானி மிஸ்டரா. இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் ஆண்டு தோறும் கூட்டம் கூட்டமாக வந்து அன்னையை தரிசனம் செய்கிறார்கள்.

- Advertisement -

துர்கா தேவி ஆனவள் கெட்டதை அழித்து நல்லதை நிலை நாட்ட கூடியவர். இந்த அன்னைக்கு பல்வேறு ஆலயங்கள் இருந்தாலும் கும்பகோணம் அருகில் இருக்கும் பட்டீஸ்வரம் மற்றும் கதிரமங்கலம் துர்க்கையின் சிறப்பு வாய்ந்த கோயில்களாக உள்ளது. அந்த வகையில் பீகாரில் உள்ள இந்த அன்னையின் கோயிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த திருத்தலத்தில் அன்னை பல்வேறு அவதாரங்களை கொண்டுள்ளார். இங்கு அன்னையானவர் திரிபுரா, துமாவதி, பகுளாமுகி, தாரா, காளி, சின்ன மஸ்தா, ஷோடசி, மாதங்கி, கமலா, உக்ர தாரா, புவனேஷ்வரி போன்ற அவதாரங்களிலும், மூலஸ்தானத்தில் துர்கா தேவியாகவும் வீற்றிருக்கிறார். இங்கு முக்கியமான அன்னையாக விளங்குபவர் ராஜ ராஜேஸ்வரி திரிபுரசுந்தரி. இந்த கோவிலில் உள்ள பைரவரை அன்ன பைரவர், கால பைரவர், மாதங்கி பைரவர் என்ற பெயரில் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

- Advertisement -

இந்தக் கோவிலில் உள்ள அதிசயம் என்னவென்றால் இரவில் இங்குள்ள தெய்வங்கள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்வதாக நம்பப்படுகிறது. இதை நம்மால் கேட்க முடியும் என்றும் சொல்கிறார்கள். தினமும் இரவில் கோவிலுக்குள் இருந்து பேசும் சத்தங்களும் சிரிப்பொலிகளும் கேட்பதாகவும் ஆனால் கோவிலுக்குள் யாரும் இல்லை என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிகழ்வு அனைவருக்கும் புதிராகவே இருப்பதாகவும் அதன் உண்மை தன்மையை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூட சொல்லப்படுகிறது. இந்த கோவில் தாந்த்ரீக தளத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

பல்வேறு இடங்களில் உள்ள தாந்த்ரீகம் செய்பவர்கள் இந்த கோவிலுக்கு தொடர்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இத்தகைய சக்திகள் நிறைந்த அபூர்வ ஆலயத்தில் பக்தர்கள் வேண்டும் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறுவதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: குழந்தை பாக்கியம் கிடைக்க தாந்த்ரீக பரிகாரம்

ஆகையால் இந்த ஆலயத்தில் உள்ள திரிபுரசுந்தரியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதுகிறார்கள். தெய்வங்கள் பேசி கொள்கின்றன என்றால் யாருக்கு தான் அந்த அன்னையை தரிசிக்க ஆசை இருக்காது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னையை தரிசிக்க வாய்ப்பு உள்ளவர்கள் தரிசனம் செய்து அன்னையின் அருளை பெறுங்கள்

- Advertisement -