நாளை 10/3/2022 வியாழன் வளர்பிறை அஷ்டமி! கஷ்டங்கள் தீர விரதமிருந்து வீட்டிலேயே எளிமையாக வழிபடுவது எப்படி?

vilakku-bairavar
- Advertisement -

நாளை வளர்பிறை அஷ்டமி திதியில் வியாழன் கிழமையும் சேர்ந்து வருவதால் நல்ல ஒரு விசேஷமான நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் மேற்கொள்ளும் விரதங்களும், வழிபாடுகளும் நம் கஷ்டங்களை நீக்கும். குறிப்பாக கடன் நீங்கி செல்வ செழிப்பு வேண்டுபவர்கள், பிள்ளை வரம் வேண்டி தவம் இருப்பவர்கள், பாவங்கள் தீர, தோஷங்கள் கழிய வேண்டும் என்று நினைப்பவர்களும் செய்ய வேண்டிய எளிதான பூஜையின் முறைதான் இது! அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்

பொதுவாக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி ரொம்பவே விசேஷமானது. வியாழன் கிழமை உடன் கூடிய இந்த வளர்பிறை அஷ்டமியில், திதி மூடிய விரதம் இருந்து உண்ணாமல், உறங்காமல் சைவ முறையில் மகாலட்சுமியையும், பைரவரையும் நினைப்பவர்களுக்கு கேட்ட வரம் கேட்டபடி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

8 வளர்பிறை அஷ்டமி திதிகளில் 8 அகல் விளக்குகள் ஏற்றி வந்தால் மடியில் கனம் உண்டாகும். அதாவது குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு இந்த அஷ்டமி வளர்பிறை திதியில் ஆரம்பித்து எட்டு வாரங்கள் இதே போல மகாலட்சுமி வழிபாடு செய்து வர கரு உண்டாகும் என்பது நம்பிக்கை. மகாலட்சுமி படம் அல்லது அஷ்டலட்சுமிகளின் திரு உருவத்துடன் கூடிய படங்கள் இருந்தால் அதனை வாசம் மிகுந்த மல்லிகை மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

8 சிறிய அளவிலான மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான வெள்ளை நிற திரியை போட்டு, சர்க்கரை பொங்கல் நிவேதனம் வைத்து, செய்த பாவங்கள் தொலைந்து பிள்ளை பேறு உண்டாக வேண்டும் என்று மனதில் நினைத்து தீபம் ஏற்றி, மகாலட்சுமி 108 நாமாவளிகளை உச்சரித்து பாருங்கள், 8 வாரத்திற்குள் நல்ல செய்திகள் கிடைக்கும்.

- Advertisement -

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு இந்த வளர்பிறை அஷ்டமி உடன் கூடிய வியாழன் கிழமையில் பைரவ பூஜை செய்வதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும். அசைவம் தவிர்த்து, திட உணவுகளை நீங்கி முடிந்தால் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். முழுநேர விரதம் இருக்க முடிந்தவர்கள் முழுநேரமும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம்.

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து 108 ஐந்து ரூபாய் நாணயங்கள் அல்லது குபேர நாணயங்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அவருக்கு சிவப்பு நிற மலர்கள் என்றால் மிகவும் விருப்பம் ஆகும் எனவே சிவப்பு நிற ரோஜா, செம்பருத்தி, செவ்வரளி போன்ற செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சிக்கலாம். நைவேத்தியமாக தயிர் சாதம் படைத்து வழிபட்டு வரலாம்.

பைரவ விரதம் இருந்து கடன் தீர மிளகு தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் அதை செய்யக்கூடாது. பைரவர் சன்னிதிக்குச் சென்று அங்கு சிவப்பு நிறத்தில் திரி வைத்து உள்ளே மிளகு போட்டு தீபம் ஏற்றுவது முறையாகும். இதற்கும் எட்டு தீபங்கள் வீதம், மிளகு தீபம் ஏற்றி வந்தால் 8 வாரத்திற்குள் தீராத கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பாவங்கள், முன்வினை கர்மாக்கள் தீர்வதற்கு தொடர்ந்து வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்கி அவருடைய விபூதியை வீட்டில் வைத்து தினமும் பூசிக் கொண்டால் வாழ்க்கையில் திருப்பம் உண்டாகும்.

- Advertisement -